சென்னை: முரண்பாடுகளின் மொத்த வடிவம் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க. இன்றைக்கு பா.ஜ.க.விடம் சரணடைந்து அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில், மக்கள் படுதோல்வியடையச் செய்து நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்குப் பிறகும், பா.ஜ.க.வுடன் […]
