ரோஹித் சர்மா இடத்தில் விளையாடப்போகும் 3 வீரர்கள்! யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா தற்போது ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் மோசமான பார்மிற்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விளையாடவில்லை. பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் சில ஓவர்களில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்தாலும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

மேலும் படிங்க: சிஎஸ்கே பேட்டர்கள் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறுகிறார்களா? விளாசிய முன்னாள் வீரர்!

இந்த ஆண்டு ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 0, 8, 13 மற்றும் 17 ரன்கள் என ஒட்டு மொத்தமாக 38 ரன்கள் மட்டுமே இந்த சீசனில் அடித்துள்ளார். ஆவரேஜ் வெறும் 9.50 மற்றும் ஸ்டிரைக் ரேட் வெறும் 131 ஆக உள்ளது. மேலும் இந்த சீசனில் ரோகித் சர்மா ஒரு இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்குகிறார். தொடர்ந்து மோசமாக விளையாடி வந்தாலும் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. ரோகித் சர்மா இடத்தில் வேறு எந்த ஒரு வீரர் இருந்தாலும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார், ஆனால் ரோகித் சர்மா என்ற ஒரே காரணத்திற்காக தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சில முக்கியமான முடிவுகளை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

டாப் ஆர்டரில் குறிப்பாக பவர் பிளேயில் விக்கெட்டுகள் சரிவதால் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்து இரண்டு சீசன்களாக மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் சிறந்த வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தாலும், அவர்கள் பெரிய வெற்றியை வில்லை. இந்நிலையில் ரோகித் சர்மாவின் இடத்தில் விளையாட சில வீரர்கள் தயாராக உள்ளனர். மீண்டும் ரோகித் சர்மா காயம் காரனமாக வெளியேறினால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓப்பனிங்கில் களமிறங்கக்கூடிய மூன்று வீரர்களை பற்றி பார்ப்போம்.

ராஜ் அங்கத் பாவா

ராஜ் அங்கத் பாவா உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். U-19 உலகக் கோப்பையில் 5 இன்னிங்ஸ்களில் 252 ரன்கள் அடித்துள்ளார். ஆல் ரவுண்டரான இவரால் தேவையான நேரத்தில் பவுலிங்கும் போட முடியும். 2022 ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ராபின் மின்ஸ்

ஜார்கண்டைச் சேர்ந்த இந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் ராபின் மின்ஸ் ஏற்கனவே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல்லில் இடம்பெற்ற முதல் பழங்குடி வீரரான மின்ஸ் கடந்த ஆண்டு விபத்து காரணமாக ஐபிஎல்லில் விளையாடவில்லை. இந்த ஆண்டு மும்பை அவரை ஏலத்தில் எடுத்தது.

பெவன் ஜேக்கப்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவின் இடத்தில் விளையாட தகுதியான மற்றொரு நபர் பெவன் ஜேக்கப்ஸ். 2025 ஐபிஎல் ஏலத்தில் 30 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இவர் இன்னும் ஐபிஎல்லில் அறிமுகமாகவில்லை என்றாலும் எதிரணிக்கு பயம் காட்ட கூடிய வீரராக உள்ளார்.

மேலும் படிங்க: பச்சை ஜெர்ஸி போட்டா… ஆர்சிபிக்கு லக்கியா… அன்லக்கியா… புள்ளிவிவரங்கள் இதோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.