வெற்றிகளை குவிக்க மும்பை எடுக்கும் அதிரடி முடிவு – நீக்கப்படும் முக்கிய வீரர்!

Indian Premier League: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad) நேற்று பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை 18.3 ஓவர்களிலேயே சேஸ் செய்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 9வது இடத்திற்கும், சிஎஸ்கே 10வது இடத்திற்கும் தள்ளப்பட்டன. 

Mumbai Indians: டெல்லி vs மும்பை

சிஎஸ்கே நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் (LSG vs CSK) மோத இருக்கிறது. அதற்கு முன், இன்று மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்றிரவு (DC vs MI) மோதுகிறது. இது நடப்பு தொடரில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் முதல்முறை நடைபெறும் போட்டியாகும். டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் வென்று பலமாக காட்சியளிக்கிறது.

Mumbai Indians: பேட்டிங்கால் தோற்கும் மும்பை இந்தியன்ஸ்

அருண் ஜெட்லி மைதானம் ஹை-ஸ்கோரிங் போட்டிகளுக்கு பெயர் பெற்றது. இதனால், கிளாஸான டெல்லியை வீழ்த்த மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) அதன் பேட்டிங்கை பெரியளவில் நம்பியாக வேண்டும். டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பாஸ்ட் பௌலர்கள் இருக்க விக்னேஷ் புத்தூர், சான்ட்னரும் நிச்சயம் பந்துவீச்சில் கைக்கொடுப்பார்கள். கடந்த சில போட்டிகளாகவே பேட்டிங்கால் மட்டுமே மும்பை அணி தோல்வியை தழுவி வருகிறது.

Mumbai Indians: வில் ஜாக்ஸ் தேவையில்லாத ஆணி 

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் ஜோடி பெரியளவில் சோபிக்காமல் இருப்பது அணிக்கு பின்னடவை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து, வில் ஜாக்ஸ் (Will Jacks) நம்பர் 3இல் வருவது மும்பைக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. காரணம், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோர் நம்பர் 4, நம்பர் 5இல் வருவது பெரிய தவறு. அவர்கள் எவ்வளவு அதிமான பந்துகளை சந்திக்கிறார்களோ அந்தளவிற்கு எதிரணிக்கு பிரச்னை எனலாம். எனவே, சூர்யகுமார் நம்பர் 3 மற்றும் திலக் வர்மா நம்பர் 4இல் வர வேண்டும்.

Mumbai Indians: யார் இந்த பெவன் ஜேக்கப்ஸ்?

பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா, நேஹல் வதேரா, மிட்செல் சான்ட்னர் இருக்க ஃபினிஷிங்கில் அவர்களுக்கு ஒரு நல்ல பேட்டர் தேவை. அந்த இடத்திற்கு வில் ஜாக்ஸிற்கு பதில் பெவன் ஜேக்கப்ஸ் (Bevon Jacobs) மும்பை இந்தியன்ஸ் இன்று களமிறக்க வாய்ப்புள்ளது. 22 வயது இளைஞரான ஜேக்கப்ஸ் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் என்றாலும், நியூசிலாந்து கிரிக்கெட் வீரராக உள்ளார். இன்னும் இவருக்கு நியூசிலாந்து தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

Mumbai Indians: பேட்டிங்கில் வலு சேர்ப்பார் 

ஆனால், லீக் கிரிக்கெட் தொடர்களில் பெவன் ஜேக்கப்ஸ் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 150 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் விளையாடும் திறன் கொண்டவராக திகழ்கிறார். ILT20 தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக இவர் விளையாடியிருந்தார். வில் ஜாக்ஸை நீங்கள் நம்பர் 5இல் விளையாட வைக்க இயலாது என்பதால் இவரை நம்பர் 5 முதல் நம்பர் 7 வரை எங்கு வேண்டுமானாலும் இறக்கலாம். இது பேட்டிங்கில் வலுசேர்க்கும். ஹர்திக் பாண்டியாவும் சூழலுக்கு ஏற்ப இவரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் கணிப்பு

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா, பெவன் ஜேக்கப்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சஹார், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா. இம்பாக்ட் வீரர்: விக்னேஷ் புத்தூர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.