வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சென்னையில் இருந்து உதகைக்கு சுற்றுலா செல்பவர்களும், தென் மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் சுற்றுலா வருபவர்கள் எல்லோரும். மேட்டுப்பாளையம் வரை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துவிட்டு, அங்கிருந்து, காலை 7-15 மணிக்கு புறப்படும் உதகை மலை ரயிலில் பயணம் செய்வார்கள். இதனால், உதகை மலை ரயிலில் எப்போதும், இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிடும்.
இதற்கு மாற்றாக, நாம் குன்னூரில் இருந்து மலை ரயிலில், டிக்கெட் முன்பதிவு செய்தால் கண்டிப்பாக டிக்கெட் கிடைக்கும். கடந்த முறை நான் குடும்பத்தோடு சென்னையில் இருந்து உதகைக்கு சுற்றுலா செல்லும்போது, குன்னூரில் இருந்து தான் உதகைக்கு சென்றேன்.
சென்னையில் இருந்து சென்ற ரயில் மேட்டுப்பாளையத்தில் காலை 6-20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைந்தது. அங்கிருந்து காரில் குன்னூர் சென்று 7.15 மணிக்கு, குன்னூரில் இருந்து புறப்படும் மலை ரயிலை பிடித்துவிட்டோம். ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்ததால், டிக்கட் கவுன்டரில் நிற்க வேண்டிய தேவை இல்லை.
ரயில் நின்ற இடத்திலேயே, ஒரு பெண்மணி சின்ன கடை வைத்து, இட்லி விற்றுக்கொண்டிருந்தார். சுடச் சுட ஆவி பறக்க, சட்னி சாம்பாருடன் விற்பனை செய்த இட்லியை ஒரு பிளேட்டில் வாங்கி, ரயிலில் அமர்ந்தே சாப்பிட்டோம்.
காலையில் இதமான குளிருக்கு, இட்லி, மெதுவடை, தேங்காய்சட்னி, சாம்பார்.
காலை டிபன் அருமை.! குன்னூரில் இருந்து சிக்குபுக்கு…. சிக்குபுக்கு… என துவங்கிய ரயில் பயணம், வெலிங்டன், அரவாங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக உதகையை சென்றடைந்தது. ஒவ்வொரு நிலையத்திலும், சுமார் 5 நிமிடங்கள் நின்றது ரயில். அப்போது, சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி, இயற்கையை ரசித்தனர்.
வழி நெடுகிலும் காடு, மலை, முகடுகளை உரசிசென்றது ரயில். உண்மையிலேயே, அருமையாக இருந்தது இந்த பயணம்.! ரயிலில் இருந்தபடியே, ஒவ்வொரு கிராமத்தையும், ஜன்னல் வழியாக ரசித்தபடியே சென்றோம்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7-15 மணிக்கு புறப்படும் மலை ரயிலில் எப்போதும் இருக்கை காலியாக இருக்காது. அதே நேரத்தில் குன்னூரில் இருந்து செல்லும் ரயிலில் கண்டிப்பாக இருக்கை கிடைக்கும்.
குன்னூரில் இருந்து காலை 7.15 மணிக்கு, 8.20, 9.20, 10.40 மற்றும் மாலை 4 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதனால், கண்டிப்பாக இந்த ரயில்களில் டிக்கெட் கிடைக்கும்.
அதே நேரத்தில் ரயில் புறப்படுவதற்கு முன்னதாகவே, குன்னூர் சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக் கொண்டால், நீங்களும் மலை ரயிலில் பயணிக்கலாம்…!
–சி.அ.அய்யப்பன்
சென்னை
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.