வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சுற்றுலா பயணங்களில் மனதை மயக்கும் ரம்யமான பகுதி என்றால் அருவி மற்றும் நீர்வீழ்ச்சி போன்றவற்றில் குளிப்பது அவற்றைப் பார்ப்பது, ரசிப்பது, அதன் மூலிகை வாசனையை நுகர்வது என்று ஏராளமான விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம் அப்படிபட்ட ஒரு இடம் தான் இந்த அழகிய அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி தாலுக்கின் அதிரப்பில்லி பஞ்சாயத்தில் சாலக்குடி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இது கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். மேலும் இது பயண விரும்பிகளுக்கு கேரள பயணப் பட்டியலில் இருக்க வேண்டிய ஒரு முக்கிய சுற்றுலாதலமாகும் ஆகும்.
எங்கள் பயணம்
இதை காணத்தான் நானும் என் இரண்டு நண்பர்களும் சேர்ந்து திருப்பூரில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சென்று வந்த பயண அனுபவம் மற்றும் அந்த நீர்வீழ்ச்சியின் சிறப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.
நாங்கள் சென்ற வழிதடம் :-
திருப்பூர் ரயில் நிலையம் – திருச்சூர் ரயில் நிலையம் – சாலக்குடி ரயில் நிலையம் – சாலக்குடி பேருந்து நிலையம் – அதிரப்பள்ளி -மலக்கப்பாரா- வால்பாறை – பொள்ளாச்சி – திருப்பூர்

சிறப்பு
இது அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியைப் போன்ற செங்குத்து வீழ்ச்சியைக் கொண்டுள்ளது எனவே இது “இந்தியாவின் நயாகரா” என்று புகழ் பெற்றது.

80 அடி உயரமும் 330 அடி அகலமும் உள்ள நீர்வீழ்ச்சியின் உயரத்தில் இருந்து நீர் விழும் காட்சி மறக்க முடியாத அனுபவங்களைத் தருகிறது.
145 கிலோமீட்டர் நீளமுள்ள சாலக்குடி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆனைமலை மலைகளில் உருவாகி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில், பெரிய பாறைகளைச் சுற்றி நீர் பாய்ந்து மூன்று தனித்தனி நீர்த்துளிகளாக கீழே விழுகிறது.
அருவிக்குக் கீழே ஆறு கண்ணம்குழியை அடையும் வரை சுமார் 1 கிலோமீட்டர் வரை கொந்தளிப்பாகவே இருக்கும், அங்கிருந்து அது அமைதியாகி தும்பூர்முழியில் உள்ள அணையை அடையும் வரை சீராகப் பாய்கிறது. பின்பு பசுமையான காடுகளின் வழியாக பாய்ந்து அரபிக் கடலை நோக்கி சென்று சேர்க்கிறது.

மழைக்காலத்தின் போது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக இருக்கும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பகுதி வனவிலங்குகளால் நிறைந்துள்ளது. யானைகள், சாம்பார் மான்கள், சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகளை நீங்கள் காணலாம்.
அருகிலுள்ள சோலையார் காடு மற்றும் வாழச்சல் வனப்பகுதி வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மலையாளம் மற்றும் பிற பிராந்திய மொழி படங்கள் உள்பட பல திரைப்படங்களுக்கு பிரபலமான படப்பிடிப்பு இடமாக இருந்து வருகிறது.
பாகுபலி, தில்சே,குரு,புன்னகை மன்னன் மற்றும் ராவணன் ஆகியவை இந்த அருவியில் எடுக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க படங்களில் அடங்கும் . கூடுதலாக, புலி, அலெக்ஸ் பாண்டியன்,மற்றும் ஜங்கிள் லவ் போன்ற படங்களின் காட்சிகளும் அதிரப்பள்ளியில் படமாக்கப்பட்டுள்ளன.

பார்வை நேரம்
-
வாரத்தின் அனைத்து நாள்களிலும் பார்வை இடலாம்
-
காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை
-
வார இறுதி நாட்களில் கொஞ்சம் கூட்டமாக இருக்கும்
கட்டணங்கள்
நுழைவு கட்டணம் :-
-
பெரியவர்கள் – 50/-
-
குழந்தைகள் – 15/- (5 முதல் 12 வயது வரை)
-
வெளிநாட்டவர் – 200/-
-
மாணவர்கள் – 10/-
-
புகைப்பட கேமரா – 60/-
-
வீடியோ கேமரா – 300/-

வாகன நிறுத்த கட்டணம் :-
2 & 3 சக்கர வாகனங்கள் – 10/-
இலகுரக வாகனம் – 30/-
நடுத்தர வாகனம் – 40/-
கனரக வாகனம் – 80/-
மலையேற்றம் & சஃபாரி கட்டணம் :-
மலையேற்றம் :- ரூ.1500/ & 1200/- (நடுகனி மற்றும் வாழச்சல் மலையேற்றம்)
காட்டு சஃபாரி:- ரூ.1500/
(அதிரப்பள்ளி – மலக்கப்பரா)
கால நிலை
கோடை காலம் :-
அதிரப்பள்ளியில் கோடை காலம் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். இந்த மாதங்களில், வெப்பநிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.
மழைக்காலம் :-
அதிரப்பள்ளியில் மழைக்காலம் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும், நாள் முழுவதும் மிதமான முதல் கனமழை வரை பெய்யும். இதுவே மிக முக்கியமான பருவமாகும்.
குளிர்காலம் :-
அதிரப்பள்ளியில் குளிர்காலம் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும், இயற்கை அழகை ஆராய்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் வானிலை இனிமையானதாக இருக்கும்.

செல்லும் வழி
விமானம் மூலம் :-
அருகிலுள்ள விமான நிலையம் கொச்சி விமான நிலையம் ஆகும். கொச்சியிலிருந்து அதிரப்பள்ளி நீர் வீழிச்சியானது 40 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் இது சர்வதேச விமான நிலையம் ஆகும்.
பயண வழி :-
கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் – அங்கமாலி – சாலக்குடி- அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி
ரயில் மூலம் :-
அருகிலுள்ள ரயில் நிலையம் சாலக்குடி ரயில் நிலையம் ஆகும். இது கொச்சியிலிருந்து அதிரப்பள்ளி நீர் வீழிச்சியானது 33 கி.மீ தொலைவில் உள்ளது. இது பிரதான ரயில் பாதையில் அமைந்துள்ளது மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
பயண வழி :-
சாலக்குடி ரயில் நிலையம் – கொன்னகுழி – அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

சாலை வழியாக :-
கேரளாவின் முக்கிய நகரங்களிலிருந்து அருவிகளுக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளன. அருகிலுள்ள பேருந்து நிலையம் சாலக்குடி பேருந்து நிலையம் ஆகும். இது சாலக்குடி கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்திலிருந்து 34 கி.மீ தொலைவிலும் சாலக்குடி தனியார் பேருந்து நிலையத்திலிருந்து 33 கி.மீ தொலைவிலும் உள்ளது. பேருந்துகள் தேவையான அளவு இயக்க படுகிறது.
பயண வழி :-
சாலக்குடி KSRTC நிலையம் – பரியாரம் – கொன்னகுழி – அதிரப்பள்ளி
சாலக்குடி தனியார் நிலையம் – பரியாரம் – கொன்னகுழி- அதிரப்பள்ளி
மேலும் வால்பாறையில் இருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்து இயக்கப்படுகிறது. இது வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர் வீழிச்சியானது 80 கி.மீ தொலைவிலும் சாலக்குடி நிலையம் பேருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது.
வால்பாறையில் – சாலக்குடி => காலை 07:30 & 09:30 மணி மற்றும் மதியம் 12:௦௦ மணி
சாலக்குடியில் – வால்பாறை => காலை 07:30 மணி மற்றும் மதியம் 02:00 & 02:40 மணி
கார் மற்றும் பைக்கில் செல்லா விருப்பினால் :-
மலக்கப்பரா & வழச்சல் சோதனைச் சாவடி திறக்கும் நேரம்
பைக்குகளுக்கு காலை 6 முதல் மாலை 4 மணி வரை
கார்களுக்கு காலை 6 முதல் மாலை 6 மணி வரை
மலக்கப்பராவிலிருந்து வழச்சல் வரை சோதனைச் சாவடி தூரம் 45 கி.மீ. சோதனைச் சாவடியில் வழங்கிய பாஸ் அடுத்த சோதனைச் சாவடியை அடைய 2 மணி நேர வரம்பு இருக்கும். ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
பயண வழி :-
வால்பாறை – சோலையார் – மலக்கப்பாரா – வாழச்சல் – அதிரப்பள்ளி – சாலக்குடி
செல்லும் முன் தெரிந்து கொள்ளவேண்டியது
-
கனமழை காலம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் எனவே பயணத்தை தவிர்க்கலாம்
-
போதுமான உணவு, தண்ணீர் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்
-
அதிகாலை 8 மணியளவில் அருவிகளைப் பார்வையிட சிறந்த நேரமாகும்
-
நீர்வீழ்ச்சிக்கு மேலே மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுகிறது
-
மாலை நேரத்திற்கு பிறகு நீங்கள் பார்வையிட அனுமதி இல்லை

-
சீரற்ற காட்டுப் பகுதியில் நடக்க வேண்டியிருக்கும் எனவே வசதியான உடைகள் மற்றும் காலணிகளை அணியுங்கள்.
-
வழுக்கும் தன்மை உள்ள கற்கள் கொண்ட சாய்வான பாதையாக இருப்பதால் கவனமாக செல்ல வேண்டும்.
-
வயதானோர், குழந்தைகள், மாற்று திறனாளிகள் மிக கவனமாக நடை பயணம் செய்யவேண்டும்.
-
கழிப்பிட வசதி, பொருட்கள் பாதுகாப்பு வசதியும் உள்ளது.
-
நுழைவுவாயில் முன் பார்க்கிங் வசதி உள்ளது பயன்படுத்தி கொள்ளவும்.
-
வாடகை வாகன வசதி, உணவகங்கள் மற்றும் பிற கடைகள் உள்ளது
-
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும்
-
கால நிலையை தெரிந்து கொண்டு பயணத்தை தொடங்கவும்
-
வன காவலர்களால் கண்காணிக்கப்படுவீர்கள்
-
குரங்குகள் உள்ளதால் பொருள்களை கவனமாக கொண்டு செல்லவும்
தங்கும் வசதி
அதிரப்பள்ளிக்கு அருகில் சில சிறந்த தாங்கும் விடுதிகள் உள்ளன. அதிரப்பள்ளியில் பட்ஜெட் விலை முதல் பிரீமியம் விலை வரை தங்கும் விடுதிகள் உள்ளது. நீங்கள் உங்கள் வசதி மற்றும் தேவைக்கு ஏற்றவாறு ஏராளமான ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள், மரவீடு அறைகள் மற்றும் வில்லாக்கள் உள்ளன.மேலும் நீர்வீழ்ச்சியின் காட்சியுடன் கூடிய உணவக வசதியை வழங்கும் தாங்கும் விடுதிகளும் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் சர்வதேச உணவு வகைகள் கிடைக்கும்.

அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்
-
வாழச்சல் நீர்வீழ்ச்சி
-
சோலையார் அணை
-
சர்ப்பா நீர்வீழ்ச்சி
-
தும்பூர்முழி அணை
-
பெரிங்கல்குத்து அணை
மலையேற்றம் & சஃபாரி முன்பதிவு செய்வதற்கு
முகவரி :- வன அலுவலர் அலுவலகம், வாழச்சல் பிரிவு, சாலக்குடி- 680 307.
தொலைபேசி :- 1) 0480-2701713 2) 0480-2701713
மின்னஞ்சல் :- [email protected]
கேரளாவிற்கு வருகை தரும் எவரும் அதிரப்பள்ளியை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிட நீங்கள் முடிவு செய்யும் போது எங்கள் வழிகாட்டி குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.