கன்னியாகுமரியில் இப்படி ஒரு நீர்வீழ்ச்சி இருப்பது குறித்து பலருக்கும் தெரியாது.
பொதுவாக கன்னியாகுமரி என்றாலே திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மணி மண்டபம், முக்கடல் இவற்றை தான் சுற்றுலா பயணிகள் பார்த்திருப்பார்கள்.
இந்த கோடை காலத்திற்கு புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் இந்த இடம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மலையில் மறைந்திருக்கும் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி பற்றி தான் சொல்லப் போகிறோம்.
குமரி மாவட்டம் குமாரகோவில் வேளிமலையில் இருக்கும் வள்ளி சுனை(வள்ளி அருவி) pic.twitter.com/Dc0auJeSoW
— Kannu Deepan KD (@kannudeepan11) August 18, 2021
இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச பிரியர்களுக்கும் ஒரு சொர்க்கமாக “வள்ளி சுனை” இருக்கிறது.
வழக்கமான சுற்றுலா இடங்களை போலாம் ஒரு அமைதியான, அழகான, கூட்டம் இல்லாத, ஆன்மீகம் நிறைந்த ஒரு சூப்பர் சுற்றுலா தலமாக இந்த இடம் உள்ளது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள இந்த வள்ளிச்சுனை, உள்ளூர் மக்களிடம் மட்டுமே பிரபலமாக இருந்தது தற்போது உலகம் டிஜிட்டல் மயமானதால் பல சுற்றுலா பயணிகள் குவியும் இடமாக மாறி உள்ளது.
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் அருகில் செல்லும் சாலையின் வழியே பயணம் செய்தால் மலையின் தொடக்கத்தில் ஒரு சிவன் கோவில் தென்படும். அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டு மலைப்பாதை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் பயணம் செய்தால் இந்த வள்ளி சுனையினை நாம் அடையலாம். மலையில் மறைந்திருக்கும் இந்த ரத்தினம் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்!