திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம். திருவிழா: வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி. தல சிறப்பு: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம் ஆகும். சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் […]
