வக்ஃப் சட்டம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கார் பகுதியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய மதசார்பற்ற முன்னணி (Indian Secular Front – ISF) கட்சித் தலைவரும் பங்கார் எம்.எல்.ஏ.வுமான நௌஷாத் சித்திக் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். இருந்தபோதும் ஏராளமான தொண்டர்கள் கூடிய நிலையில், கூட்டம் தடுப்புகளை உடைத்து முன்னேறியது, […]
