ரூ.400 இருந்தா போதும்.. 150 நாட்கள் அன்லிமிடெட் ஆ பேசலாம், தினமும் 2 ஜிபி டேட்டா பெறலாம்

BSNL Cheap Recharge Plan: பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல விதமான மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல்லின் போர்ட்ஃபோலியோவில் பல ரீசார்ஜ் திட்டங்கள் இருந்தாலும் ரூ.400க்கும் குறைவான திட்டம் தான் பெஸ்ட். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டம் 150 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முழு விவரத்தை இப்போது காண்போம்.

BSNL 150 நாட்கள் ரீசார்ஜ் திட்டம்
BSNL இன் இந்த திட்டத்தின் விலையைப் பற்றி பேசுகையில், இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.397 ஆகும். மேலும் இந்த திட்டத்தில் பயனர் 150 நாட்கள் வேலிடிட்டி காலம் பெறுவார்கள். இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்துடன் நிறுவனம் டேட்டா நன்மையையும் பெறுவார்கள். அதனுடன் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா, எஸ்எம்எஸ் சேவையின் நன்மைகளைப் பெறலாம்.

எனினும் BSNL-இன் 150 நாள் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் முதல் 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS-களுடன் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் STD அழைப்புகளையும், அடுத்த 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவையும் பெறுவார்கள். அதனுடன் தினசரி இணைய ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, பயனர்கள் 40Kbps வேகத்தைப் பெறுவார்கள்.

இருப்பினும், 150 நாள் ரீசார்ஜ் திட்டத்தில், முதல் 30 நாட்களுக்கு மட்டுமே உங்களுக்கு SMS மற்றும் டேட்டா சேவை வழங்கப்படும், ஆனால் சிம் 150 நாட்கள் முழுவதும் செயலில் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பிஎஸ்என்எல் எண்ணை இரண்டாம் நிலை எண்ணாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்தத் திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், BSNL வலைத்தளம், BSNL சுய பராமரிப்பு பயன்பாடு அல்லது PhonePe, Google Pay போன்ற ஆன்லைன் கட்டண பயன்பாடுகள் மூலம் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். 

இதனிடையே சமீபத்தில் தான் பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை வலுப்படுத்த 75,000 புதிய 4ஜி மொபைல் கோபுரங்களை நிறுவியுள்ளது, இது அரசு தொலைத்தொடர்பு சேவையின் இணைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் 1 லட்சம் 4G கோபுரங்களை நிறுவும் இலக்கை நிறுவனம் அடையப் போகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 4G சேவைகளை தொடங்க BSNL தயாராகி வருகிறது. இதனுடன், நிறுவனம் 5G தொழில்நுட்பத்தையும் சோதிக்கத் தொடங்க உள்ளது. வரும் காலங்களில், பயனர்கள் BSNL இன் 4G மற்றும் 5G சேவைகளை அனுபவிக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.