வக்பு போராட்டத்தால் வன்முறை: மேற்கு வங்கத்தில் பதற்றம் நீடிப்பு; கூடுதல் துணை ராணுவ படையினர் குவிப்பு

முர்ஷிதாபாத்: வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து நடை​பெற்ற போராட்​டம் வன்​முறை​யாக மாறிய​தால் மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத்​தில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இதையடுத்​து, மேலும் 5 கம்​பெனி துணை ராணுவ படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

நாடாளு​மன்ற இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு சட்ட திருத்த மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் அளித்​தார். இதைத் தொடர்ந்​து, நாடு முழு​வதும் வக்பு சட்​டம் அமலுக்கு வந்​துள்​ளது. இதற்​கிடையே, வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லும் முஸ்​லிம் அமைப்​பு​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றன.

மேற்கு வங்க மாநிலத்​தில் வக்பு சட்​டத்தை அமல்​படுத்த மாட்​டோம் என்று முதல்​வர் மம்தா பானர்ஜி கூறி​யிருந்த நிலை​யில், வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து அம்​மாநிலத்​தில் தீவிர​மாக போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில், முர்​ஷி​தா​பாத் மாவட்​டத்​தில் நடந்த போராட்​டம் வன்​முறை​யாக மாறிய​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். 150 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதையடுத்​து, அங்கு மத்​திய படைகளை அனுப்​பு​மாறு கொல்​கத்தா உயர் ​நீ​தி​மன்​றம் கடந்த 12-ம் தேதி உத்​தர​விட்​டது.

வீரர்கள் மீது தாக்குதல்: இந்த நிலை​யில், அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ள எல்லை பாது​காப்பு படை​யினர் மீது போராட்​டக்​காரர்​கள் தாக்​குதல் நடத்​தினர். இதனால், பதற்​ற​மான சூழ்​நிலை உரு​வானதை அடுத்​து, கூடு​தலாக 5 கம்​பெனி எல்லை பாது​காப்பு படை வீரர்​கள் அங்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து எல்லை பாது​காப்பு படை டிஐஜி நீலோத்​பல் குமார் பாண்டே கூறிய​தாவது: முர்​ஷி​தா​பாத்​தில் ஏற்​கெனவே 4 கம்​பெனி எல்லை பாது​காப்பு படை வீரர்​கள் உள்​ளனர். அங்கு பதற்​ற​மான சூழல் உரு​வான​தால், மேலும் 5 கம்​பெனி வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். பதற்றமான பகு​தி​களுக்கு வீரர்​கள் அனுப்​பப்​படு​கின்​றனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளோர் தீவிர தாக்​குதல் நடத்​தி​ய​தால், கோஸ்​பரா பகு​தி​யில் கடந்த 12-ம் தேதி துப்​பாக்​கிச் சூடு நடத்த நேர்ந்​தது. எங்​களது வாக​னங்​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. சுதி, சம்​சர்​கஞ்ச் ஆகிய பகு​தி​களில் பதற்​றம் நீடிப்​ப​தால், அங்கு அதிக அளவில் வீரர்​கள்​ அனுப்​பப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.