பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. இக்கொலை மிரட்டல் காரணமாக சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு மட்டுமல்லாது, போலீஸாரும் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். தற்போது சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பை ஒர்லி போக்குவரத்து பிரிவு வாட்ஸ்அப் நம்பருக்கு இக்கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் சல்மான் கான் வீட்டிற்குள் புகுந்து அவரை கொலை செய்வோம் என்றும், சல்மான் கான் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து விசாரித்து வருகின்றனர். இக்கொலை மிரட்டல் குறித்து சல்மான் கான் தரப்பில் இது வரை எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால் இக்கொலை மிரட்டல் காரணமாக சல்மான் கானுக்கும், அவரது மும்பை இல்லத்திற்கும் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். 2024ம் ஆண்டில் இருந்து சல்மான் கானுக்கு டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்ற மாஃபியாவின் ஆட்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தற்போது வந்துள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து சல்மான் கானிடம் வெளிப்புற படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதோடு தகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்புகளில் பங்கேற்கும்படி சல்மான் கானிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதோடு சல்மான் கானின் நண்பரும், முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சருமாக பாபா சித்திக் என்பவரை மும்பையில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டுக் கொலை செய்தனர்.