Actor Sri: ''ஶ்ரீயை தொடர்புகொள்ள நீண்ட நாட்களாக முயற்சிக்கிறோம்'' – தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’ போன்ற திரைப்படங்களின் மூலமாக நமக்கு பரிச்சயமான ஶ்ரீயின் சமூக வலைதளப் பக்கத்தின் பதிவுகள்தான் தற்போதைய பேச்சாக இருக்கிறது.

மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சில பதிவுகளில் “நிலையான பாலினம் அற்றவர் (Gender Fluid) என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஶ்ரீ கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான ‘இறுகப்பற்று’ படத்தில் நடித்திருந்தார்.

அத்திரைப்படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஶ்ரீயின் நிலைக் குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், ” ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட நாங்கள் நீண்ட நாட்களாக அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.

இது குறித்து பல ஊகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ஆனால், ஸ்ரீயைக் கண்டிபிடித்து அவரை மீண்டும் நல்ல உடல்நலத்திற்குக் கொண்டு வருவது எங்களின் முதல் முன்னுரிமையாக இருக்கும்.

இதை அடைய எங்களுக்கு உதவ யாராவது முன்வந்தால் மிகவும் பாராட்டுவோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.