‘லக்னோ vs சென்னை’
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்றுவிட்டு சென்னை அணி இந்தப் போட்டிக்கு வருகிறது. போட்டியின் டாஸை தோனியே வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார்.
தோனி பேசுகையில், ‘நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறேன். ரசிகர்கள் பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன்.

அதனால் போக போக பேட்டிங் ஆட வசதியாக இருக்கும். இப்படியொரு சூழலில் நாங்கள் சரியான மனநிலையில் இருக்க வேண்டியது ரொம்பவே முக்கியம். பேட்டிங்கில் நாங்கள் சீராக செயல்படவில்லை. பௌலிங்கில் வலுவாகவே இருக்கிறோம். ஒரு அணியாக நேர்மறையான மனநிலையோடு இருக்க வேண்டும்.
பெரிய ஷாட்களை ஆட நினைத்தால் ஆடி விட வேண்டும். எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. கான்வேயும் அஷ்வினும் பென்ச்சில் இருக்கப்போகிறார்கள். ஷேக் ரஷீத்தும் ஓவர்ட்டனும் அணிக்குள் வருகிறார்கள்.’ என்றார்.