LSG-க்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருப்பதாக அனைவராலும் கூறப்பட்டது. இதற்கு காரணம் அணியின் இருந்த முக்கிய பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்ததுதான். அந்த அணியும் ஏலத்தில் விலைப்போகாத ஷர்துல் தாக்கூரை அழைப்பு விடுத்து அணிக்கு வருகை தர கூறியது. அதன்படி ஷர்துல் தாக்கூரும் அணிக்கு திரும்பினார். இருப்பினும் அந்த அணியின் பவுலிங் யூனிட் மிகவும் வீக்காக தெரிந்தது. 

அந்த அணி இத்தொடரில் வெற்றி பெறுவது மிக கடினம் என்றும் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில்தான் அந்த அணி தொடர் இறுதியில் முடிக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அந்த அணி விமர்சனங்களுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முக்கிய வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாத போதிலும், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ் போன்றோர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். 

மேலும், அந்த அணியின் பேட்டிங் வரிசை மிக பலமாக இருப்பதால், தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரான் ஆகியோர் ஆரஞ்ச் கேப் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது. 

22 வயதான மயங்க் யாதவ், முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிபட்டு வந்தார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வு எடுத்து வந்தார். அவர் முழு உடல் தகுதியை எப்போது பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாட தயார் ஆகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 

அவர், நாளை (ஏப்ரல் 15) லக்னோ அணி ட்ரைனிங் கேம்ப்பில் சேர உள்ளார் எனவும் 19 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார் எனவும் கூறப்படுகிறது. அவர் லக்னோ அணியில் சேர்வது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும், மேலும், இன்று (ஏப்ரல் 14) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி லக்னோவில் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: டெல்லி அணி கேப்டன் அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்.. என்ன காரணம்?

மேலும் படிங்க: இனி கேமரா நடக்கும், ஓடும்… நாயை போல் சேட்டை செய்யும் – வேற லெவலுக்கு போகும் ஐபிஎல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.