துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது.
அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நியூசிலாந்து வீரர்களான ஜேக்கப் டபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் மார்ச் மாத சிறந்த வீரரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாத சிறந்த வீரராக இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களில் மார்ச் மாத சிறந்த வீராங்கனையாக ஜார்ஜியா வோல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
