ஐ.பி.எல்.: பஞ்சாப் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்..?

மும்பை,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் காயம் காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் வெறும் 2 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அந்த போட்டியில் பஞ்சாப் தோல்வியை தழுவியது. இவர் விலகும் பட்சத்தில் அது நிச்சயம் பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக அமையும்.

பெர்குசன் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

1 More update

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.