ஒரு கோடிக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு சாதித்த ராமய்யா காலமானார்

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், கம்​மம் மாவட்​டம் ரெட்​டிபல்லி கிராமத்தை சேர்ந்​தவர் ராமய்யா (87). விவ​சா​யி​யான ராமய்யா 50 வருடங்​களுக்​கும் மேலாக கம்​மம் உட்பட அதன் சுற்​றுப்​புற மாவட்​டங்​களில் உள்ள பள்​ளி, கல்​லூரி, பேருந்து நிலை​யங்​கள், விளை​யாட்டு மைதானங்​கள், அரசு அலு​வல​கங்​கள் என பல இடங்​களில் மரக்​கன்​றுகளை நடு​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​தார்.

இதனால் இவரை சிலர் கேலி​யும் செய்​ததுண்​டு. ஆனால், அவர் அதனை பொருட்​படுத்​து​வ​தில்​லை. இவர் தன் சட்டை மீதும், தலை​யிலும் “இயற்​கையை நாம் காப்​பாற்​றி​னால் இயற்கை நம்மை காப்​பாற்​றும்” எனும் வாசகத்தை ஒரு அட்​டை​யில் ஒட்டி செல்​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​தார். இவரது சேவையை அறிந்த மத்​திய அரசு, ராமய்​யா​வுக்கு கடந்த 2017-ல் பத்ம  விருது வழங்கி பாராட்​டியது.

இவருக்கு ‘வன ஜீவி’ என மக்​கள் பெயர் வைத்​துள்​ளனர். இந்​நிலை​யில், ராமய்யா 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்​டின் அருகே ஒரு மரக்​கன்றை நட்டு விட்டு இரவு அதன் அரு​கிலேயே படுத்து உறங்கி விட்​டார். நேற்று முன்தினம் காலை அவரை எழுப்​பிய அவரது வீட்​டார், அவர் அசை​யாமல் இருக்​கவே, அவரை மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்று மருத்​து​வரிடம் காண்​பித்​தனர்.

அப்​போது, ஏற்​கெனவே ராமய்யா மாரடைப்​பால் இறந்துவிட்​டார் என்​பதை மருத்​து​வர்உறு​திப்​படுத்​தி​னார். இதை யடுத்து ராமய்யா மறைவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.