சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் மே 2 ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், சில தலைவர்கள் கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் மே 2ந்தேதி கூடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் […]
