கேம்பிரிட்ஜ்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகள் மீது வரி விதிப்பு, குடியுரிமை கொள்கையில் கெடுபிடி என டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளை அதிரவைத்து வருகின்றன. இந்த நிலையில், உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தி டிரம்ப் அதிரடி காட்டினார்.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு டிரம்ப் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ”பல்கலைக் கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும்” உள்ளிட்ட்வை இடம் பெற்று இருந்தன.
இதனை ஏற்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் மறுத்தது. இதனால், கோபம் அடைந்த டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கான 2.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ. 18,858 கோடி) மானியங்களை நிறுத்தியுள்ளார். மேலும், 60 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ. 514 கோடி ரூபாய்) ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல்கலைக்கழமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான நிதியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களும் நூற்றுக்கணக்கானோர் பயின்று வருகிறார்கள்.