சென்னை மறுபதிப்பு செய்யபட்ட 300 அரிய வகை ஆன்மீக நூல்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்து சமய அறநிலையத்துறையானது தொன்மை வாய்ந்த திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், திருக்கோவில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சமய நெறிகளை பரப்பிடும் வகையில் […]
