Indian Premier League: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் (IPL 2025) கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சிஎஸ்கே, லக்னோ உள்ளிட்ட அணிகள் அவற்றின் முதல் பாதி போட்டிகளை, அதாவது 7 போட்டிகளை நிறைவு செய்துவிட்டன. லீக் சுற்றில் இந்த அணிகளுக்கு இன்னும் 7 போட்டிகளே உள்ளன.
IPL 2025: எந்தெந்த அணிகள் பிளே ஆப் போகும்?
குஜராஜ், ஆர்சிபி, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் 6 போட்டிகளையும், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் 5 போட்டிகளையும் விளையாடி உள்ளன. புள்ளிப்பட்டியலும் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்தாண்டு எந்த அணிகள் பிளேஆப் போகும் என்பதை இன்னும் பெரியளவில் கணிக்க இயலவில்லை எனலாம்.
IPL 2025: புள்ளிப்பட்டியல் நிலவரம்
குஜராத், டெல்லி, ஆர்சிபி, லக்னோ அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. கேகேஆர் மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ளன. மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 7வது, 8வது, 9வது, 10வது இடத்தில் உள்ளன.
IPL 2025: கம்பேக் கொடுத்த மும்பை, ஹைதராபாத், சென்னை
கடைசி 4 இடத்தில் அணிகள் அடுத்து 2 போட்டிகளை வென்றாலே புள்ளிப்பட்டியலின் மேலிடத்திற்கு வந்துவிடும் வாய்ப்பு தற்போது இருக்கிறது. அதிலும் இந்த வாரம் ஹைதராபாத், மும்பை, சென்னை அணிகள் பெரியளவில் கம்பேக் கொடுத்திருப்பதால் முதற்பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் பெரியளவில் விறுவிறுப்பாக இருக்கும் எனலாம்.
IPL 2025: அடுத்தடுத்த போட்டிகள் யாருடன்?
மும்பை, ஹைதராபாத், சிஎஸ்கே அணிகள் பலமான ஒன்று என்றாலும் அவை முறையே 7வது, 9வது, 10வது இடத்தில் உள்ளார்கள். இவர்களில் தொடரில் இருந்து வெளியேறப்போவது யார், பிளே ஆப் ரேஸில் தொடரப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், தற்போது இந்த 3 அணிகளுக்கும் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அந்த சிக்கல் என்னவென்று சொல்வதற்கு முன் அந்த அணிகளின் அடுத்தடுத்த போட்டிகள் யார் யாருடன் என்பதை முதலில் பார்க்கலாம்.
– மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஏப். 17, மும்பை வான்கடே
– மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஏப். 20, மும்பை வான்கடே
– சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஏப். 23, ஹைதராபாத்
– சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஏப்.25, சென்னை
IPL 2025: பிளே ஆப் செல்ல இதை செய்தாக வேண்டும்?
ஆம், இந்த 3 அணிகளே அடுத்தடுத்து தங்களுக்குள்ளேயே விளையாட உள்ளன. இதில்தான் பெரிய சிக்கலே உள்ளது இதில் எந்த அணி அதிக வெற்றிகளை குவிக்கிறதோ அந்த அணிதான் புள்ளிப்பட்டியலில் கடகடவென முன்னேற்றம் அடையும் எனலாம். இதில் தொடர் தோல்விகளை சந்தித்தால் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இயலாது.
அதாவது, மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் 3 போட்டிகளிலும் வெற்றி அடைய துடிக்கும். சிஎஸ்கே அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற விடாமல் முயலும். ஒருவேளை மும்பை அணியோ, சன்ரைசர்ஸ் அணியா யாரோ ஒருவர் 2 அல்லது 3 தோல்விகளை சந்தித்துவிட்டால் நிச்சய் பிளே ஆப் வாய்ப்பு அந்த அணிக்கு குறைந்துவிடும்.
சிஎஸ்கேவை பொறுத்தவரை நிச்சயம் 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. சிஎஸ்கே பிளே ஆப் போக வேண்டும் என்றாலும் மற்ற 2 அணிகளுக்கு பின்னடைவு கொடுக்க வேண்டும் என்றாலும் சிஎஸ்கேவுக்கு அடுத்து வரும் இந்த 2 போட்டிகள் மிக மிக முக்கியம் ஆகும்.