Chennai Super Kings: நடப்பு 18 ஆவது ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக மிக மோசமான தொடக்கமே அமைந்திருக்கிறது. இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது, சிஎஸ்கே அணி. புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பும் மிக மிக குறைவாகவே உள்ளது.
Chennai Super Kings: 19 வீரர்களை பயன்படுத்திவிட்ட சிஎஸ்கே
இந்த ஏழு போட்டிகளில் பல பிளேயிங் லெவன் மாற்றங்களை சிஎஸ்கே பார்த்துவிட்டது. பல்வேறு காம்பினேஷன்களையும் பார்த்துவிட்டது. நேற்று விளையாடிய பிளேயிங் லெவன் ஓரளவுக்கு சமநிலையுடன் இருந்தாலும், ராகுல் திரிபாதிக்கு பதில் வேறொருவரை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறு. இதுவரை இந்த சீசனில் மொத்தம் 19 வீரர்களை சிஎஸ்கே அணி பயன்படுத்திவிட்டது. மீதம் இருக்கும் 6 வீரர்களுடன் தற்போது மற்றொரு வீரரும் இணைந்துள்ளார்.
Chennai Super Kings: மிரட்டிய ஷேக் ரஷீத்
அதன்படி நேற்றும் (ஏப். 14) சிஎஸ்கே அணி 20 வயதான ஷேக் ரஷீத்தை அறிமுகப்படுத்தியது. அவரும் நேற்று சரவெடியாக வெடித்து 19 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 27 ரன்களை குவித்தார். ஓப்பனிங்கில் மட்டும் ராகுல் திரிபாதி, டெவான் கான்வே உள்ளிட்ட ஆப்ஷன்களை முயற்சித்து பார்த்த நிலையில் தற்போது ரச்சின் ரவீந்திராவுடன் ஷேக் ரஷீத் தொடக்கத்தை அளிப்பார் என்ற நம்பிக்கையை உருவாகியுள்ளது.
Chennai Super Kings: உள்ளே வரும் ஆயுஷ் மாத்ரே
அதே நேரத்தில் தற்போது ருத்ராஜ் கெய்க்வாட் காயத்தில் சிக்கியிருப்பதால் அவருக்கு மாற்று விரரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று அறிவித்துள்ளது. 17 வயதான மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே அணி மாற்று வீரராக அறிவித்திருக்கிறது. இவர் 2024-25 சீசனில் ரஞ்சிக் கோப்பையிலும், விஜய் ஹசாரே தொடரிலும் மும்பை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இவரும் ஓப்பனிங் ஸ்பாட்டில் விளையாடக்கூடியவர்.
Chennai Super Kings: ராகுல் திரிபாதிக்கு பதில் யார்?
ராகுல் திரிபாதிக்கு பதில் வன்ஷ் பேடி முயற்சித்து பார்க்கலாமா அல்லது ஆயுஷ் மாத்ரேவை முயற்சிக்கலாமா என்ற குழப்பம் அணிக்குள் வரலாம். ஒருவேளை, வன்ஷ் பேடிக்கு பதில் ஆயுஷ் மாத்ரேவை கொண்டுவந்தால் அவரை நம்பர் 3இல் விளையாட வைக்க இயலாது. ரச்சினுடன் ஓபனிங்கிலேயே மாத்ரேவை பயன்படுத்த இயலும்.
Chennai Super Kings: நம்பர் 3இல் ஷேக் ரஷீத்
நேற்று சிஎஸ்கே வெற்றி பெற்றதற்கு ஷேக் ரஷீத் கொடுத்த அந்த சூப்பரான ஓபனிங்தான் காரணம். இருப்பினும் அவர் நேர்த்தியான ஷாட்களை விளையாடும் காரணத்தால் ஓப்பனிங்கை போல் நம்பர் 3 இடத்திலும் சூப்பராக விளையாட இயலும். எனவே, ஓபனிங்கில் ஆயுஷ் மாத்ரேவையும் ஷேக் ரஷீத்தை நம்பர் 3 இடத்திலும் விளையாட வைக்கலாம். இது காம்பினேஷனையும் இடிக்காது.
சுழற்பந்துவீச்சாளர்களை ரஷீத் சிறப்பாக கையாள்வார் என்பதால் சிஎஸ்கே அணியுடன் கடந்த 3 ஆண்டுகளாக பயணித்து வருவதாலும் அவரை நம்பர் 3இல் இறக்கினாலும் அவர் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புள்ளது.