UPSC TNPSC: 'வேலைப் பார்த்துக்கொண்டேதான் படித்தேன், அதனால்…' – அனுபவம் பகிரும் ராஜ்குமார் IFS!

‘UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

‘UPSC/TNPSC குரூப் -1, 2 – தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி சென்னை தி.நகர், G.N செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடைபெற இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

UPSC / TNPSC குரூப் தேர்வுக்கான  இலவச பயிற்சி முகாம்
UPSC / TNPSC குரூப் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்

இந்த நிகழ்வில் M.ராஜ்குமார் IFS சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இந்நிலையில் M.ராஜ்குமார் IFS-ஐ தொடர்புக்கொண்டு அவரது IFS பயணம் குறித்து கேட்டோம். இதுதொடர்பாக நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், “எனது குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. இன்ஜினீயரிங் முடித்தவுடனேயே வேலைக்கு சென்றுவிட்டேன். வேலைப் பார்த்துக்கொண்டேதான் நான் படித்தேன்.

நிறைய சவால்கள் இருந்தாலும் நான் வேலையை விடவில்லை. வேலைக்குச் சென்றுக்கொண்டே படித்ததால் தூங்கும் நேரம் குறைவாக இருக்கும். ஃப்ரி டைம் இருக்காது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை லீவ் கிடைத்தால் படிப்பதற்கு அந்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வேன். வேலைப் பார்த்துக்கொண்டே படிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதுவே என்னை ஊக்கப்படுத்தியது. நேரத்தை வீணடிக்க மாட்டேன். கிடைக்கின்ற நேரத்தில் படிப்பேன்.

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வு இலவசப் பயிற்சி
‘UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வு இலவசப் பயிற்சி

நிறையப் பேர் வேலையை விட்டுவிட்டு முழு நேரம் எடுத்துக்கொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது. அதனால் வேலைப்பார்த்துக் கொண்டே படிக்கலாம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஏன் சிவில் சர்வீஸைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பது குறித்தும்… அதில் உள்ள சிறபம்சங்கள் என்ன? மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான டிப்ஸ் & டிரிக்ஸ், குறித்தும் விகடன் மற்றும் King Makers IAS அகாடமி நடத்தும் இலவசப் பயிற்சி முகாமில் (ஏப்ரல் 27 ஆம் தேதி)பேச இருக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.