சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை விலக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி வைணவம் சைவம் தொடர்பாக சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி தமிழ்நாடு முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். […]
