ASUS நிறுவனம் தற்போது AI-பாவர்ட் ExpertBook P சீரிஸ் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை குறிப்பாக உயர் செயல்திறன், வலுவான கட்டுமானத் தரம் மற்றும் சிறந்த பாதுகாப்பைத் தேடும் வணிக பயனர்கள் மற்றும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் சீரிஸில் மூன்று மாடல்கள் உள்ளன – ExpertBook P1, P3 மற்றும் P5. இவற்றின் ஆரம்ப விலை ரூபாய் 39,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த லேப்டாப்கள் ஏப்ரல் 21 முதல் பிளிப்கார்ட் தளத்தில் (அதன் விரைவான விநியோக சேவை) விற்பனைக்கு கிடைக்கும்.
ASUS நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு மலிவு விலையில் உயர்தர கணினி அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்கள் வேகமாக இயங்குவதுடன் நமது வேலைக்கு தேவையான பல ஸ்மார்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்தத் சீரிஸில் மிகவும் சக்திவாய்ந்த மாடல் ExpertBook P5 ஆகும், இது Intel இன் சமீபத்திய Core Ultra 7 (Series 2) செயலி, 32GB LPDDR5X RAM மற்றும் Dual PCIe Gen 4 SSDகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், P3 மற்றும் P1 மாடல்கள் 13வது ஜெனரல் இன்டெல் கோர் i7 H-சீரிஸ் செயலிகளை ஆதரிக்கின்றன, அவை 64GB வரை ரேம் மற்றும் டூயல் SSD ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ளன.
Introducing the all-new ASUS ExpertBook P-Series laptop range!
Experience worry-free performance, expandability, durability, support, security, and connectivity.
Prices are Revealed! Sale starts on Flipkart on 21st April.#ASUSxFlipkart
Know more : https://t.co/QVkMCzenQb pic.twitter.com/MhyPusrXsE
— ASUS India (@ASUSIndia) April 16, 2025
இந்த லேப்டாப்களில் பல AI அடிப்படையிலான ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை:
• ரியால்-டைம் மீட்டிங் டிரான்ஸ்கிரிப்ஷன்
• லைவ் சப்டைடல் டிரான்ஸ்லேஷன்
• பேக்ராவுண்ட் நாய்ஸ் கான்சலேஷன்
• வீடியோ க்வாலிட்டி அற்புதமாக மேம்படுத்தும்.
ExpertBook P3 மற்றும் P5 ஆகியவை அலுமினிய சேசிஸைக் கொண்டுள்ளன, மேலும் அனைத்து மாடல்களும் அமெரிக்க இராணுவ தர MIL-STD-810H சான்றிதழைக் பெற்றுள்ளன.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த லேப்டாப்கள் டாப்:
• Self-healing BIOS
• TPM 2.0 சிப்
• பயோமெட்ரிக் லாகின்
• கேமராவிற்கான தனியுரிமை ஷட்டர்
• 1 வருட இலவச McAfee+ பிரீமியம் சந்தா (AI பாதுகாப்புடன்)
பேட்டரியைப் பற்றிப் பேசுகையில், இது 63Wh பேட்டரியைக் கொண்டுள்ளது, சுமார் 20 மணி நேரம் நீடிக்கும்.
Flipkart இல் வாங்கலாம்:
• ஜிஎஸ்டி பில்லிங்
• வீடியோ டெமோ
• சர்விஸ் பேக்
• விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு 14,900+ பின் குறியீடுகளில் வழங்கப்படுகிறது.
தொடக்கச் சலுகைகள்:
• ₹3,000 தள்ளுபடி (ஏப்ரல் 21–27)
• 2 வருட இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (ஏப்ரல் 21–23)
• 2 ஆண்டுகள் இலவச விபத்து சேதப் பாதுகாப்பு (ஏப்ரல் 21–23)
• 1 வருட இலவச McAfee+ பிரீமியம் (₹3,900 மதிப்புள்ள)
விலை நிலவரம்:
• ExpertBook P1: ₹39,990
• ExpertBook P3: ₹64,990
• ExpertBook P5: ₹94,990