சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாகி விட்டோம்: முர்ஷிதாபாத் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை

முர்ஷிதாபாத்: சொந்த மண்​ணிலேயே நாங்​கள் அகதி​களாக மாறி வசிக்க வேண்​டிய நிலை வந்​து​விட்​டது என்று முர்​ஷி​தா​பாத் நகரத்​தில் வசிக்​கும் பெண்​கள் முறை​யிட்டு வரு​கின்​றனர். வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து மேற்கு வங்க மாநிலத்​தின் பல்​வேறு இடங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் முர்​ஷி​தா​பாத்​தில் கடந்த வாரம் நடந்த போராட்​டம், வன்​முறைச் சம்​பவங்​களில் முடிந்​தது. இந்த வன்​முறைச் சம்​பவங்​களில் 3 பேர் உயி​ரிழந்​தனர்.

வன்​முறைச் நிகழ்ந்தபோது வீட்​டின் உள்ளே ஒளிந்து இருந்த ஹர்​கோபிந்தோ தாஸ் (72), அவரது மகன் சந்​தன் தாஸ் (40) உட்பட 3 பேர் வீட்​டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு குத்​திக் கொல்​லப்​பட்​டனர். இதையடுத்து அங்கு போலீ​ஸாரும், துணை ராணுவத்​தினரும் குவிக்​கப்​பட்டு நிலை​மை​யைக் கட்​டுக்​குள் கொண்டு வந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் இந்த வன்​முறைச் சம்​பவத்​தின்​போது சுமார் 400 பேர் முர்​ஷி​தா​பாத்​தின் பல்​வேறு கிராமங்​களில் இருந்து தப்​பியோடினர். அவர்​களை மீட்​புப் படை​யினர் மீட்​டு, பள்​ளி​களில் அமைக்​கப்​பட்ட தற்​காலிக முகாம்​களில் தங்க வைத்​துள்​ளனர். இந்த சம்​பவத்​தில் சிக்கி பாதிப்​படைந்த சப்​தமி மண்​டல் (24) என்ற பெண், பர்​லாப்​பூர் பகு​தி​யிலுள்ள உயர்​நிலைப் பள்​ளி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள முகாமில் தங்​கி​யுள்​ளார்.

வன்​முறை சம்​பவத்​தால் ஏற்​பட்ட பயம் அவரது கண்​ணிலிருந்து வில​க​வில்​லை. தனது 8 வயது பெண் குழந்​தையை மடி​யில் போட்​டுக் கொண்டு அவர் பேசி​ய​தாவது: வன்​முறைச் சம்​பவம் நடந்த அன்று நாங்​கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்​தோம். உயிரைக்கையில் பிடித்​துக் கொண்டு கால்போன போக்​கில் ஓடி தப்​பித்​தோம். எங்​கள் கிராமத்​தைச் சேர்ந்த சுமார் 400 பேர் தப்​பியோடினோம்.

என் கணவர் கொல்​கத்​தா​வில், கட்​டிட வேலை பார்க்​கிறார். நான் துலி​யான் கிராமத்​தில் தங்​கி​யிருந்​தேன். இனி கிராமத்​துக்கு திரும்​புவோமா என்​பது தெரி​யாது. மரண பயம்​தான் இன்​னும் நெஞ்​சில் இருக்​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். சப்​தமி​யின் தாய் மகேஸ்​வரி மண்​டல் கூறும்​போது, “வன்​முறை நடந்​த​போது வீடு​களுக்​குள் ஒளிந்​திருந்த நாங்​கள், இரவு நேரத்​தில் படகு மூலம் ஆற்​றைக் கடந்து தப்​பித்​தோம். அதன் பின்​னர் பிஎஸ்​எஃப் துணை ராணுவத்​தினர் எங்​களை இந்த முகா​முக்கு அழைத்து வந்​தனர்.

நாங்​கள் எங்​கள் சொந்த மண்​ணிலேயே அகதி​களாகி விட்​டோம். நாங்​கள் மீண்​டும் கிராமத்​துக்கு திரும்ப முடி​யாது. அவர்​கள் மீண்​டும் எங்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​னால் என்ன செய்​வது?” என்​றார் இதுகுறித்து அப்​பகு​தி​யைச் சேர்ந்த காலி​யாசவுக் -3 பிளாக்கை சேர்ந்த அரசு அதி​காரி சுகந்தா சிக்​தர் கூறும்​போது, “தப்பி வந்​தவர்​கள் இங்கு தங்​கு​வதற்கு ஏற்​பாடு செய்​துள்​ளோம். மேலும் மருத்​து​வக் குழு​வினரை அழைத்து வந்து அவர்​களுக்​குத் தேவை​யான உதவி​களைச் செய்​துள்​ளோம். அவர்​களுக்கு உணவு வழங்கி வரு​கிறோம்’’ என்​றார்.

பணம் கொள்ளை: முர்​ஷி​தா​பாத் வன்​முறைச் சம்​பவங்​களின்​போது ஏராள​மான பொது​மக்​களின் பணம் கொள்​ளை​யடிக்​கப்​பட்​ட​தாக பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கடைகள் சூறை: இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட கடை உரிமை​யாளர்​களில் ஒரு​வர் கூறும்​போது, “வன்​முறை​யின்​போது கடைகளை சூறையாடி அதில் இருந்த பணத்தை கொள்​ளை​யடித்து விட்​டனர்.

என்​னுடைய கடையி​லிருந்து ரூ.13.5 லட்​சம் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டது. மேலும் கடையி​லிருந்த ரூ.7 லட்​சம் முதல் 8 லட்​சம் மதிப்​பிலான ஃபர்​னிச்​சர்​கள், கருவி​கள் திருடிச் செல்​லப்​பட்​டன. இதனால் எனக்கு ரூ.20 லட்​சம் முதல் ரூ.25 லட்​சம் வரை நஷ்டம் ஏற்​பட்​டுள்​ளது. இதே​போல் பலரின் கடையி​லிருந்​தும் பணம், பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டுள்​ளன’’ என்​றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.