தென்காசி, நெல்லை மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இனி ஜி.பே., போன் பே போன்ற யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய வசதியை அரசு போக்குவரத்து திருநெல்வேலி கிளை அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மண்டல அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக, பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறைபடுத்தியுள்ளது.

டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை ஸ்வைப் செய்தோ அல்லது கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது ஜி.பே, போன் பே போன்ற யு.பி.ஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்து பேருந்தில் நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.” என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொது மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
