`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
`லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தியப் பேட்டி ஒன்றில் பேசிய பூஜா ஹெக்டே, ” ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறேன். ரஜினிகாந்த் சார் உடன் பணியாற்றிய அனுபவம் ரொம்பவே ஸ்பெஷல்’ என்று கூறியிருக்கிறார்.
தமன்னாவின் காவாலா பாடல் போல இருக்குமா என்கிற கேள்விக்கு பதிலித்த பூஜா ஹெக்டே,” இல்லை இது முற்றிலும் வேறு விதமான வைபில் இருக்கும். நிச்சயம் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…