DC vs RR : கெத்து காட்டிய அக்சர் படேல், கோட்டைவிட்ட கருண்… ஆர்ஆர், டிசி மேட்ச் சுவாரஸ்யம்

IPL Match Highlights : ஐபிஎல் 2025 இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். கடந்த சில போட்டிகளாகவே முதலாவது பேட்டிங் ஆடும் அணியே வெற்றி பெற்று வரும் சூழலில் சாம்சன் தைரியமாக பந்துவீசும் முடிவை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியில் ஓப்பனிங் இறங்கிய ஜேக் பிரேசர் மெக்குர்க் வழக்கம்போல சொற்ப ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். 9 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோப்ரா ஆர்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் ஓப்பனிங் இறங்கிய மற்றொரு பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் சிறப்பாக விளையாடி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன் எடுக்கும் முன்பாக ஹசரங்கா பந்துவீச்சில் ரியான் பராக்கிடம் கேட்சு கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் சிறப்பாக ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இப்போட்டியில் தேவையில்லாமல் ஓடி ரன்அவுட்டாகி வெளியேறினார். ஒரு ரன்கூட எடுக்கவில்லை கருண் நாயர்.

மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேஎல் ராகுல் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 32 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அவருக்கு பின்னர் இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடினார். 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் ஆட வந்ததுமே அதிரடியாக ஆடினார். 14 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் குவித்தார். அக்சரின் அதிரடி ஆட்டம் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர மிக முக்கிய காரணமாக அமைந்தது. 

அதேநேரத்தில் ராஜஸ்தான் அணியில் பீல்டிங் மோசமாகவும் இருந்தது. இரண்டு கேட்சுகளை கோட்டைவிட்டனர். இதனையடுத்து சவாலான ஸ்கோரை சேஸிங் செய்ய ராஜஸ்தான் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாம்சன் மற்றும் ஜெய்ஷ்வால் இருவரும் அதிரடியாக விளையாடினர். அப்போது, சாம்சன் கொடுத்த ஒரு சூப்பரான கேட்சை அஷூதோஸ் சர்மா கோட்டைவிட்டார். ஆனால், திடீரென காயம் ஏற்பட்டதால் சாம்சன் பேட்டிங் ஆடாமல் பெவிலியன் திரும்பினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.