கார் 4 கோடி; நம்பர் 46 லட்சம் – கேரளாவை அசரவைத்த CEO; பின்னணி என்ன?

லிட்மஸ் சிஸ்டம்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் வேணு கோபாலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர்.

சமீபத்தில் இவர், கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே அதிக விலைக்கு நம்பர் பிளேட்டை வாங்கியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார்.

Lamborghini Urus Performante
Lamborghini Urus Performante

‘KL 07 DG 0007’ என்ற கவர்ச்சியான நம்பரை மோட்டார் வாகனத்துறை (MVD) நடத்திய ஆன்லைன் ஏலத்தில் வாங்கியுள்ளார். இதற்கு அவர் கொடுத்த விலை 45.99 லட்சம் ரூபாய்.

இந்த நம்பர் பிளேட்டை அவரது ஆடம்பரமான லம்போர்கினி உரஸ் பெர்ஃபார்மண்டே (Lamborghini Urus Performante) என்ற 4 கோடி மதிப்புமிக்க காரில் பொருத்தியுள்ளார்.

போபாலகிருஷ்ணன் அவரது ஆடம்பரமான பர்சேஸ் குறித்து இன்ஸ்டாகிராமில், “காத்திருப்பு முடிந்தது! எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர் லம்போர்கினி உரஸ் பெர்ஃபார்மண்டை சந்தியுங்கள், இது ஏற்கெனவே இதன் நம்பர் பிளேட்டுக்காக, கேரளாவின் மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான வாகன எண்ணான ‘KL 07 DG 0007’ என்ற சாதனை எண்ணுக்காக இது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே தனது கலெக்‌ஷனில் உள்ள லம்போர்கினி ஹுராகான் ஸ்டெராடோ மற்றும் BMW M1000 XR பைக் உள்ளிட்ட பிற உயர் ரக வாகனங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் கோபாலகிருஷ்ணன்.

0007 என்ற எண்ணுக்கான ஏலம் 25,000ல் தொடங்கியது. இதில் 5 பேர் கலந்துகொண்டனர். போட்டி மிகவும் கடுமையானதாக சென்று இரண்டு நபர்கள் மோதிக்கொண்டனர்.

இறுதியில், முந்தைய சாதனையான ரூ.44.84 லட்சத்தைத் தாண்டி கோபாலகிருஷ்ணன், 45.99 லட்சம் ரூபாய் ஏலம் கேட்டார்.

இதே ஏலத்தில்  ‘KL 07 DG 0001’ என்ற எண் 25.52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த ஏலம் மாநில அரசின் முயற்சியில் நடைபெற்று வருகிறது. கவர்ச்சியான எண்களை ஆறு வகையாக பிரித்து 3000 முதல் 1 லட்சம் வரை ஆரம்ப விலையில் ஏலம் நடத்தப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.