மாட்ரிட்,
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றின் 2-வது கட்ட ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் – அர்செனல் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் அர்செனல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காலிறுதியின் முதற்கட்ட ஆட்டத்திலும் வெற்றி பெற்ற அர்செனல் அணி ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மொத்தத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்செனல் அணி ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ரியல் மாட்ரி காலிறுதியுடன் வெளியேறியுள்ளது.
அர்செனல் அணி அரையிறுதியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் உடன் மோத உள்ளது.
Related Tags :