7 இருக்கை பெற்ற பிரீமியம் வசதிகளை கொண்டுள்ள கோடியாக் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் ரூ.46.89 லட்சம் முதல் ரூ.48.69 லட்சம் வரை முறையே ஸ்போர்ட்லைன் மற்றும் L&K (Laurin & Klement) என இரண்டிலும் கிடைக்கின்றது.
2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆனது மைலேஜ் ARAI மூலம் 14.86Kmpl ஆக உறுதி செய்யப்பட்டு அதிகபட்சமாக 204hp மற்றும் 320Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 7 வேக DCT கியர்பாக்ஸ் கொண்டு ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பெற்றதாக கிடைக்கின்றது.
இரு மாடல்களுக்கும் பொதுவாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 9 ஏர்பேக்குகளை பெற்று ESC, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் டிஃபெரன்ஷியல் லாக் ஆகியவற்றை பெற்று ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகளும் உள்ளது.
இன்டீரியரில் 13-இன்ச் ஃபுளோட்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன், HVAC கட்டுப்பாடு, நேவிகேஷனுடன் கூடிய புதிய 10-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ‘ஸ்கோடா’ எழுத்துகளுடன் கூடிய புதிய இரண்டு-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் (ஸ்போர்ட்லைனில் மூன்று-ஸ்போக்) உள்ளன.
- Skoda Kodiaq Sportline: ரூ. 46.89 லட்சம்
- Skoda Kodiaq L&K: ரூ. 48.69 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம்)
தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டுள்ள இந்த காருக்கான டெலிவரி மே 2 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
கோடியாக் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-line, ஜீப் மெர்டியன், நிசான் எக்ஸ்-ட்ரெயில் உட்பட சிட்ரோன் C5 ஏர்கிராஸ் மற்றும் டூஸான் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.