வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வரி கேட்டு நோட்டீஸ்

வேலூர்: ​காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 150 குடும்​பங்​களுக்கு வக்பு வாரி​யம் வரி கேட்டு நோட்​டீஸ் அனுப்​பிய விவ​காரம் தொடர்​பாக, வரு​வாய் கோட்​டாட்​சி​யர் விசா​ரணை நடத்தி வரு​கிறார்.

வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு ஒன்​றி​யம் இறைவன்​காடு ஊராட்​சிக்கு உட்​பட்ட காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 500 குடும்​பத்​தினர் வசித்து வரு​கின்​றனர். இவர்​களில் 150 குடும்​பத்​தினர் வசிக்​கும் வீடு​கள் வக்பு வாரி​யத்​துக்கு சொந்​த​மானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரி​யம் நோட்​டீஸ் அனுப்​பிய​தாகப் புகார் எழுந்​துள்​ளது.

இது தொடர்​பாக அப்​பகு​தி​யினர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் அளித்த புகாரில், “இங்கு 4 தலை​முறை​களாக வசித்து வரு​வதுடன், அரசுக்கு வரி செலுத்தி வரு​கிறோம். தற்​போது இந்த இடம் வக்பு சொத்து என்​றும், வரி கட்​டா​விட்​டால் வீடு​கள் அகற்​றப்​படும் என்​றும் நோட்​டீஸ் கொடுத்​துள்​ளார்​கள்” என்​றனர்.

இதுகுறித்து இந்து முன்​னனி சார்​பில் மாவட்ட ஆட்​சி​யரிடம் அளித்த மனு​வில், ‘கீழண்டை நவாப் மசூதி மற்​றும் ஹசரத் சையத் அலி சுல்​தான் ஷா தர்கா சார்​பில் வக்பு போர்​டுக்கு வரி கேட்டு நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே, அந்​தக் குடும்​பங்​களுக்கே பட்டா வழங்க வேண்​டும்’ என்று தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக தர்​கா​வின் முத்​தவல்லி சையத் சதாம் தரப்​பினர் கூறும்​போது, “காட்​டுக்​கொல்​லை​யில் 5 ஏக்​கருக்கு மேல் வக்​புக்கு சொந்​த​மான நிலம் உள்​ளது.

1954-ல் இருந்தே இதற்​கான ஆவணங்​கள் உள்​ளன. வக்பு இடத்​தில் உள்​ளவர்​களை முறைப்​படுத்​தவே நோட்​டீஸ் கொடுத்​துள்​ளோம். அந்த இடத்தை காலி செய்​ய​வோ, இடிப்​போம் என்றோ சொல்​ல​வில்​லை” என்​றனர். இதையடுத்​து, மாவட்ட ஆட்​சி​யர் வி.ஆர்​.சுப்​புலட்​சுமி உத்​தர​வின்​பேரில், வரு​வாய் கோட்​டாட்​சி​யர் தலை​மை​யில், வட்​டாட்​சி​யர், கிராம நிர்​வாக அலு​வலர் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டு, விசா​ரணை நடத்​தப்​படு​கிறது.

பொது​மக்​கள் மற்​றும் தர்கா அளிக்​கும் ஆவணங்​களை பரிசீலித்த பின்​னரே, உரிய முடி​வெடுக்​கப்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பாஜக கண்​டனம்: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தனது எக்ஸ் வலை​தளத்​தில், “காட்​டுக்​கொல்​லை​யில் நடந்த நிகழ்​வு, வக்பு சட்​டத் திருத்​தத்​தின் முக்​கி​யத்​து​வத்தை உணர்த்​தி​யுள்​ளது. பல தலை​முறை​களாக வசித்​து​வரும் குடும்​பங்​களை சட்ட விரோத​மாக அகற்ற முற்​படு​வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். அந்த மக்​களுக்கு நீதி கிடைக்​கவில்லை என்​றால், அங்குசென்று போ​ராட்​டத்​தை முன்னெடுப்​போம்​” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.