ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான 2025 டியோ 125 ஸ்கூட்டரில் தற்போது ஓபிடி-2பி மேம்பாடு ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது கூடுதலாக 4.2 அங்குல TFT கிளஸ்ட்டருடன் அதே நேரத்தில் புதிய மாறுபட்ட கிராபிக்ஸ் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.
DLX, H-Smart என இரு விதமான வேரியண்டினை பெற்றுள்ள டியோவில் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே, பேர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள், பேர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் இம்பீரியல் ரெட் என 5 விதமான நிறங்களை கொண்டுள்ளது.
ஆக்டிவா 125 மற்றும் டியோ 125 என இரு மாடல்களும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொள்வதுடன் 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஹோண்டா ரோடுசிங் ஆப் மூலம் பெற முடிகின்றது. கூடுதலாக, இந்த ஸ்கூட்டரில் மற்ற வசதிகளான டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் பின்புறத்தில் ஒற்றை சாக் அப்சார்பருடன் இருபக்கத்திலும் 12 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.
124சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சினில் OBD-2B மேம்பாட்டை பெற்று 8.3hp மற்றும் 10.5Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
- DLX – ₹96,749
- H-Smart – ₹1,02,144
(எக்ஸ்-ஷோரூம்)