தலைக்கு தலைக்கவசம், வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ்! தலைக்கவசம் எப்படி நம் உயிரைக் காக்குதோ அதேமாதிரி நம் உடல் நலம் பாதிக்கப்பட்டா மருத்துவ காப்பீடும், நாம் உயிரிழந்தா நம்ம குடும்பத்தை ஆயுள் காப்பீடும் காக்கும். அதனாலதான் ஒரு குடும்பத்துக்கு மருத்துவ காப்பீடும், குடும்பத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆயுள் காப்பீடும் அத்தியாவசியம்.
சரி, ஆயுள் காப்பீடு & மருத்துவ காப்பீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்களை இங்க பார்ப்போம்…

மருத்துவ காப்பீடு:
– யாருக்கு மருத்துவ காப்பீடு? – உங்களுக்கா இல்ல மொத்த குடும்பத்துக்கான்னு முதலில் முடிவெடுங்க (குடும்பத்துக்கே எடுப்பதுதான் நல்லது).
– எவ்ளோ காப்பீடு வேணும்னு முடிவு பண்ணுங்க – பொதுவா 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 5-10 லட்சம் குறைந்தபட்ச காப்பீடு இருப்பது அவசியம்.
– காப்பீட்டில் என்ன கொடுக்குறாங்கன்னு பாருங்க – தங்கும் வசதி, ஆபரேஷன், முக்கியமான நோய்கள் எல்லாம் கவர் ஆகுதான்னு பாருங்க.
– நல்ல மருத்துவமனைகள் இருக்கா? – உங்க காப்பீட்டில், உங்களுக்கு அருகே இருக்கும் நல்ல மருத்துவமனைகள் கட்டணமின்றி சிகிச்சை தருதான்னு பாருங்க.
– காத்திருப்பு நேரம் & க்ளெய்ம் – மருத்துவத்துக்காக நீங்க செய்த செலவு திரும்பவும் கிடைக்க எவ்ளோ நாள் ஆகும்னும், அது சிக்கலின்றி கிடைக்குமான்னும் உறுதி செஞ்சுக்கோங்க.
ஆயுள் காப்பீடு (எனும் டெர்ம் இன்ஷூரன்ஸ்)
– உங்களுக்கு எவ்ளோ காப்பீடு வேணும்னு முடிவு பண்ணுங்க – உங்க ஆண்டு வருமானத்தின் 10 – 20 மடங்கு தொகைக்கு காப்பீடு எடுப்பது நல்லது.
– எவ்ளோ நாளைக்கு பிரீமியம் கட்டணும்? – பொதுவா நீங்க ரிட்டையர் ஆகும் வயது வரை அல்லது நீங்க பொருளாதாரத்தில் தற்சார்பு அடையும் காலம் வரை டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது.
– பணம் எப்படி செலுத்த போறீங்க? – மாதாமாதமா? வருஷாவருஷமா? இல்ல லிமிட்டெட் பே-வாகவா? (உதாரணம் – 20 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் செலுத்துவது, ஆனா கவரேஜ் உங்க 60 வயது வரை கிடைக்கும்)
– தேவையான ரைடர்களை சேர்க்கவும் – தீராத வியாதி, ஆக்சிடென்ட் போன்ற சிறப்பு விஷயங்களை வேணும்னா சேர்த்துக்கோங்க
– க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ – எந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி 90%-க்கும் மேல க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ கொண்டிருக்கோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது (90% என்பது 10-ல் 9 பேருக்கு செட்டில்மென்ட் போயிருக்கு என்பதை குறிக்குது.)

நீங்க இன்ஷூரன்ஸ் எடுக்க போறீங்களா? மேலும் காப்பீடு தொடர்பாக உங்க சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கணுமா? நீங்க எடுத்திருக்கும் காப்பீடு உங்களுக்கு சரியானதான்னு தெரிஞ்சுக்கணுமா? விகடன் ‘லாபம்’ வழங்கும் ‘காப்பீடும் முதலீடும்’ வெபினாரில் தவறாம கலந்துக்கோங்க!
நாள்: ஏப்ரல் 20, 2025, ஞாயிறு
நேரம்: காலை 11 மணி
பேச்சாளர்கள்: கிருஷ்ண தாசன், டைரக்டர், தனவிருக்ஷா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் & ஏ. ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & முன்னாள் நாணயம் விகடன் ஆசிரியர்
150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். கட்டணம் ஏதுமில்லை.
முன்பதிவுக்கு: https://forms.gle/sYKY3fafb5SBSbgQ8