அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்; சங்கல்பியுங்கள்

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள்! உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்

பைரவ வடிவங்களில் சிறப்பானவர் சொர்ணாகர்ஷண பைரவர். சொர்ணம் அதாவது தங்கத்தை ஆகர்ஷணம் செய்து தனது பக்தர்களுக்கு வழங்குவதாலேயே சொர்ணாகர்ஷண பைரவர் என்று போற்றப்படுகிறார். தான்னாலேயே பூமியில் செல்வவளம் கொழிப்பதாகவும், தன்னிடம் உள்ள செல்வத்தின் அளவு குறித்தும் இறுமாப்பு கொண்டார் குபேரன். இது தவறு என்று கருதிய சொர்ணாகர்ஷண பைரவர், குபேரரை காவிரிப் பூம்பட்டினத்தில் பட்டினத்தாராகப் பிறக்க வைத்தார் என்று ஒரு புராணக் கதை உண்டு.

தன்னை வேண்டி நியாயமாக வாழும் அனைவருக்கும் செல்வவளம் அளிப்பவர் சொர்ணாகர்ஷண பைரவர். திருமகள், குபேரர் ஆகிய இருவருக்கும் அதிபதியாக விளங்கி அதிர்ஷ்டத்தையும் ஆனந்தத்தையும் வழங்கும் அருள் வள்ளல் இவர். இவரை அட்சய திருதியை நாளில் வணங்கினால் அளவில்லாத செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. அதிலும் வெற்றியின் அடையாளமான அன்னை பைரவியோடு இணைந்து பைரவரை வணங்க சிறப்பிலும் சிறப்பிலும் சேரும்.

நவகிரகங்களில் சூரியனைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர் சொர்ணாகர்ஷண பைரவர். இவருக்குத் துணையாக இருப்பவள் பைரவி. சொர்ண கலசத்தை ஏந்தி அதில் திருமகளை ஆவாகணப்படுத்தி இருக்கும் சொர்ண பைரவர் வடிவத்தை வணங்க வாழ்வில் உண்டாகும் தோல்வி, வீழ்ச்சி, நஷ்டம் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். நிலையான செல்வத்தை, நிலையான இன்பத்தை, நிலையான புகழை, நிலையான ஆரோக்கியத்தை, நிலையான அமைதியைப் பெறலாம் என்பது உறுதி.

திருதியை, அஷ்டமி மற்றும் பௌர்ணமி, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சொர்ணாகர்ஷண பைரவரை வணங்கினால் வேண்டியது விரைவில் நிறைவேறும் என்பதும் ஐதிகம். அதிலும் அட்சய திருதியை நாளில் தம்பதி சமேதரான சொர்ணாகர்ஷண பைரவருக்கும் ஸ்ரீபைரவிக்கும் திருமணம் நடத்தி வைத்து வேண்டிக்கொண்டால் உங்கள் எல்லாவித வேண்டுதல்களும் நிறைவேறும். பெரும் பொருள் செலவில் நடத்தப்படும் இந்த சொர்ணாகர்ஷண பைரவர் – பைரவி திருமண வைபவத்தை உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது.

சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்

பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஞானமேடு பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீபைரவி சமேத ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம். இங்கு பைரவியை மடியில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். மகான் சேஷாத்திரி சுவாமிகள் தவமிருந்த புண்ணிய பூமியான இங்கு முத்து குருக்கள் சுவாமிகளின் உத்தரவுப்படி இங்கு இந்த ஆலயத்தைக் கட்டி கோலாகலமாக இங்கு விழாக்கள் எடுத்து வருகிறார். வரும் அட்சய திருதியை நாளில் அன்பர்கள் செல்வவளம் பெருகவும் தரித்திரம் ஒழியவும் 30-4-2025 அன்று சிறப்பான சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி கல்யாண வைபவம் நடைபெற உள்ளன, வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அட்சய திருதியை நாளில் (30-4-2025) இந்த வைபோகத்தில் கலந்து கொண்டால் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக பொன் பொருள் சேரும்.

சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பதிவு செய்ய இந்த QR – கோடை பயன்படுத்திக் கொள்ளவும்.

சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.