தள்ளுபடி புயலை அள்ளி வீசும் பிளிப்கார்ட்… பிடிச்சத இன்னைக்கு வாங்கிடுங்க

Flipkart Super Cooling Sale 2025 full details: பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சூப்பர் கூலிங் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில், பல மின்னணு சாதனங்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின்னணு சாதனங்களின் விலை குறைந்தள்ளது.

பிளிப்கார்ட் சூப்பர் கூலிங் டேஸ் சேல் 2025 | Flipkart Super Cooling Sale 2025
பிளிப்கார்ட்டின் சூப்பர் கூலிங் டேஸ் சேல் கடந்த ஏப்ரல் 6 முதல் தொடங்கியது, ,மேலும் ஏப்ரல் 24 வரை நேரலையில் இருக்கிறது. இந்த மெகா விற்பனையில் மக்கள் ஏசிகள், கூலர்கள் மற்றும் ஃபிரிஜ் (குளிர்சாதன பெட்டி) போன்ற பொருட்களில் பெரும் தள்ளுபடியை பெறலாம். இதில் ஃபிரிஜ் பற்றிப் பேசுகையில், வோல்டாஸ் பெக்கோ டாடா தயாரிப்பு 228 லிட்டர் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபுள் டோர் 3 ஸ்டார் (Voltas Beko by A Tata Product 228 L Frost Free Double Door 3 Star Refrigerator) ஃபிரிஜ்ஜில் 41 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 41 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு, இந்த டபுள் டோர் ஃபிரிஜ்ஜின் விலை ரூ.23,190 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, டெபிட், கிரெடிட் மற்றும் UPI பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக் ரூ.1,000 தள்ளுபடியும் இதில் வழங்கப்படுகிறது. Godrej நிறுவனத்தின் டபுள் டோர் ஃபிரிஜ் வெறும் ரூ.29,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், எல்ஜியின் 185 லிட்டர் டைரக்ட் கூலிங் சிங்கிள் டோர் ஃபிரிஜ்ஜை ரூ.17,490க்கு வாங்கலாம். இந்த ஃபிரிஜ்ஜில் மொத்தமாக 26% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் விற்பனை தள்ளுபடி சலுகைகள்:
இது தவிர, வாஷிங் மெஷினில் இருக்கும் தள்ளுபடியை பற்றி பேசுகையில், இந்த விற்பனையில் ரூ.6 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாஷிங் மெஷினை நாம் வாங்கலாம். வோல்டாஸ் பெக்கோ டாடா தயாரிப்பு 7.5 கிலோ வாஷர் மெரூன், வெள்ளை (WST75BBRT) {Voltas Beko by A Tata Product 7.5 kg Washer only Maroon, White  (WST75BBRT) } வாஷிங் மெஷின் பிளிப்கார்ட்டில் ரூ.7,490க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த வாஷிங் மெஷினை வெறும் ரூ.5,990க்கு வாங்கலாம்.

இது தவிர, இந்த விற்பனையில் நீங்கள் MarQ பிராண்டின் 3 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ஸ்பிளிட் ஏசியை (Split AC) வெறும் ரூ.20,990க்கு வாங்கலாம். இந்த ஏசியில் 54% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எல்ஜியின் புதிய 2025 AI பிளஸ் கன்வெர்ட்டிபிள் ஏசியை 47% தள்ளுபடி விலையில் வாங்கலாம். ஸ்மார்ட் டிவியைப் பற்றிப் பேசுகையில், Blaupunkt இன் 43-இன்ச் 4K ஸ்மார்ட் டிவி ரூ.23,899க்கு விற்பனை செய்யப்படுகிறது. Realme இன் ஸ்மார்ட் டிவியை ரூ.9,999 ஆரம்ப விலையில் வாங்கலாம். Samsung, LG, Sony போன்ற டாப் பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் சாம்சங்கின் 4K ஸ்மார்ட் டிவியை ரூ.22,999 ஆரம்ப விலையில் வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.