நவீன நுட்பங்களுடன் 2025 டிவிஎஸ் அப்பாச்சி RR 310 சந்தைக்கு வந்தது | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நவீன நுட்பங்களை அப்பாச்சி பைக்குகளில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள நிலையில் ஃபேரிங் ஸ்டைல் அப்பாச்சி RR310 2025 மாடலில் லான்ச் கண்ட்ரோல், கார்னரிங் டிராக் கண்ட்ரோல் போன்றவற்றுடன் ரூ.2,77,999 முதல் ரூ.2,99,999 வரை விலை நிர்ணயம் செய்துள்ளது.


கூடுதலாக BTO எனப்படுகின்ற முறையிலான ஆப்ஷன் கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

TVS Apache RR310

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாலை பந்தய சாம்பியன்ஷிப் (ARRC) போட்டியில் சிறந்த லேப் நேரம் 1:49.742 வினாடிகள் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 215.9 கிமீ ஆக பதிவு செய்துள்ள ஆர்ஆர் 310 பைக்கில் தொடர்ந்து புதிய OBD-2B விதிமுறைகளுக்கு உட்பட்டு ரிவர்ஸ் இன்கிளைன்டு DOHC 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 9,800 rpm-ல் 38 PS பவர் மற்றும் 7,900 rpm-ல் 29 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

செபாங் ப்ளூ என்ற புதிய ரேசிங் நிறத்தை பெற்றதாக அமைந்துள்ள ஆர்ஆர்310 மாடலில் Track, Sport, Urban, மற்றும் Rain என நான்கு விதமான ரைடிங் மோடுகளுடன்  புதிய சிக்யூன்சியல் டர்ன் இன்டிகேட்டர், 8 ஸ்போக் கொண்ட அலாய் வீல் உடன் வந்துள்ளது.

 

Variant Price (Ex-Showroom India)
Red (without quickshifter) Rs. 2,77,999
Red (with quickshifter) Rs. 2,94,999
Bomber Grey Rs. 2,99,999
BTO (Built To Order)
·    Dynamic Kit
·    Dynamic Pro Kit
·    Race Replica Colour
Rs 18,000
Rs 16,000
Rs 10,000

தற்பொழுது டிவிஎஸ் டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவரி அடுத்த சில வாரங்களுக்குள் துவங்கப்படலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 நிறங்கள்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.