பஞ்சாப்புக்கு வெற்றியை பெற்று தந்த வதேரா.. ஆர்சிபி-க்கு சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது தோல்வி!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 18) ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. 

இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமானது. இதனால் 9.30 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 9.45 மணிக்கு போட்டியானது தொடங்கியது. அதேபோல் மழையின் காரணமாக போட்டியின் ஓவர்களும் 14 ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபில் சால்ட் 4 ரன்களிலும் விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து ரஜத் படிதார் களம் இறங்கி ரன்களை சேர்த்தார். ஆனால் அவருடன் நின்று ரன்களை சேர்க்க ஆள் இல்லாமல் தவித்தார். 

லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் சர்மா 2, குர்னால் பாண்டியா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க படிதாரும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி 41 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தி ஒரு மோசமான நிலையில் இருந்தது. இந்த நிலையில் டிம் டேவிட் களத்திற்கு வர, ஆர்சிபி அணிக்கு ரன்கள் சேர ஆரம்பித்தன. மோசமான நிலையில் இருந்த ஆர்சிபி அணியை அவரே காப்பாற்றினார். இறுதி வரை களத்தில் நின்ற அவர்,. அரை சதம் அடித்தார். ஆர்சிபி அணிக்கும் 95 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அர்ஷதீப், மார்கோ யான்சன், சஹால் மற்றும் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சேவியர் பார்ட்லெட் 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா 16 மற்றும் பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஜோஸ் இங்கிலிஸ், 14 என ஆட்டமிழக்க, போட்டியை வதேரா முடித்து வைத்தார். அவரது அதிரடியில் ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்கள் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆர்சிபி அணி இத்தொடரில் 3வது தோல்வியை தழுவியது. இந்த 3 தோல்விகளுமே அவர்களது சொந்த மைதானத்தில் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: சிஎஸ்கேவில் இவருக்கு பதில் இவர்.. நுழையும் அதிரடி வீரர்.. இனி வெற்றி கன்பார்ம்!

மேலும் படிங்க: ‘ஃபிக்ஸிங்’ செய்தாரா தோனி? கிளம்பும் சர்ச்சை.. உண்மை பின்னணி என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.