லண்டன்,
சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கோள் உள்ளது.இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும்
இந்நிலையில், இந்த கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன். இவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கே2-15பி கோளில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தது. அதில், பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறான டைமெத்தில் சல்பைடு கண்டறிந்தனர்.
இதன் மூலம் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.