நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. அவர் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசியாக அவர் விளையாடிய 22 இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மா 6 முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். மீதமுள்ள 16 இன்னிங்ஸ்களில் அவர் 20 ரன்களுக்கு குறைவாகவே ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது ஐபிஎல் கேரியரை கேள்விக்குறி ஆக்கி உள்ளது.
இதன் காரணமாக ரோகித் சர்மா ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் ரோகித் சர்மா-வின் ஓய்வு குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதே அவர் ஓய்வை அறிவிப்பது நல்லது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் ரசிகர்களே, ஓய்வு பெறுங்கள் என கூறத் தொடங்கி விடுவார்கள்.
ரோகித் சர்மா 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே ஒரு சீசனில் மட்டுமே 400 ரன்களை கடந்துள்ளார். அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரர் இல்லை. கேப்டனாக இருந்தபோது அவர் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒருகட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவர் இத்தனை நாட்கள் கட்டிக்காத்த லெகசி பாதிப்படையும்.
ரோகித் சர்மாவிடம் யாராவது சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக ஆடும்படி கூற வேண்டும். நான் விளையாடிய காலத்தில் ஃபார்மில் இல்லாத சமயத்தில் சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் கொஞ்சம் பொறுமையாக விளையாடும்படி கூறுவர். அப்படி ரோகித் சர்மாவிடம் யாராவது சொல்ல வேண்டும் என கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் சற்று தடுமாறிய மும்பை அணி கடந்த போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த போட்டியாக வரும் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: Virat Kholi : ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் – விராட் கோலி சந்திக்கும் வாய்ப்பு..!
மேலும் படிங்க: இந்திய அணியில் பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்! பின்னால் இருப்பது யார்?