சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 100 கிரேம் எடையுள்ள தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியதை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த தங்கக்கட்டியை மருத்துவர்கள் வயிற்றில் இருந்து அகற்றியுள்ளனர். SuZhou பகுதியில் வசிக்கும் அந்த சிறுவன் வீட்டில் இருந்த தங்கக்கட்டியை விழுங்கிய நிலையில் அவனது வயிறு சிறிது உப்பிய போதிலும் வயிற்றில் கடுமையான வலி எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அச்சிறுவனை உடனடியாக Soochow பல்கலைக்கழக சிறார் மருத்துமனைக்கு அவனது பெற்றோர்கள் கொண்டுச் சென்றனர். […]
