RCB vs PBKS: பெங்களூருவில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி – பஞ்சாப் போட்டி நடக்குமா?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 33 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இத்தொடரின் 34வது போட்டியில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த இரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 4வது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி 2வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை தோல்வி பெற்ற இரண்டு போட்டிகளுமே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றதாகும். எனவே சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் வெற்றி பெற்று சொந்த மைதானத்தில் வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்பில் இருக்கிறது. இதன் காரணமாக பெங்களூரு அணியின் செயல்பாடு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

 இந்த நிலையில், பெங்களூருவில் மழை பெய்து வருகிறது. இதனால் இப்போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவிருந்த நிலையில், தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. போட்டி தொடங்கும் நேரத்தை பொருத்து ஓவர்கள் குறைக்கப்படும். 

இரு அணிகளின் உத்தேச பிளேயிங் 11

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல் (இம்பேக்ட்), ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா. 

பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்)/மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷக். 

மேலும் படிங்க: ‘ஃபிக்ஸிங்’ செய்தாரா தோனி? கிளம்பும் சர்ச்சை.. உண்மை பின்னணி என்ன?

மேலும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப்போகும் மெகா அதிரடி பிளேயர்..!.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.