Retro: "`மெளனம் பேசியதே' படம் பிடிக்க இதுவும் ஒரு காரணம்"- ரகசியம் பகிரும் கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா – பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

என்னுடைய கண்ணாடி பூவே

இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ரெட்ரோ எனக்கு பர்சனலாக ஸ்பெஷலான திரைப்படம்.

எனக்கு பெரும்பாலும் கேரக்டர்களோட க்ரே ஷேட் வச்சு எழுதுவதற்குப் பிடிக்கும். அதே மாதிரி எனக்கு லவ் ஸ்டோரி பண்ணனும்னு ஆசை.

ரெட்ரோ படத்தில்…

என்னுடைய கண்ணாடி பூவே சத்யா; என் வைஃப். அவளுக்கு ஆக்‌ஷன் பிடிக்காது. என்கிட்ட லவ் படம் பண்ணணும்னு கேட்டுட்டே இருந்தா.” எனப் பேசினார்.

“மௌனம் பேசியதே எனக்கு பிடித்த படம்”

மேலும், “இந்த படத்தோட கதையை நான் முன்னாடியே எழுதிட்டேன். வெளிப்படையான மனநிலையோட போய் படத்தை பாருங்க.

You dont choose art, art chooses you ங்கிற விஷயத்தை நான் ரொம்பவே நம்புறேன். ரொம்ப வருஷமாக எனக்கு இந்தக் கதையை பண்ண முடியாமலையே இருந்தது.

நான் சூர்யா சாருடைய மிகப்பெரிய ரசிகன். எனக்கு `மெளனம் பேசியதே’ படம் ரொம்பப் பிடிக்கும். இன்ஜினீயரிங் படிக்கும்போது பசங்க, பொண்ணுங்ககிட்ட பேசமாட்டாங்க. அப்போ இந்தப் படத்தை நாங்க பார்த்து சார் மாதிரி இருக்கணும்னு சொல்லுவோம்.

ரெட்ரோ
ரெட்ரோ

இந்த படம் ஏதோவொரு வகையில கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நாங்க படப்பிடிப்புக்கு போகுற இடத்துக்கெல்லாம் எங்களை மழை பின் தொடர்ந்து வந்தது. நான் மழையில் பிளான் பண்ணாத சில சீன்ஸ் கூட மழையில எடுக்கவேண்டியதா இருந்துச்சு. சூர்யா சார்ல இருந்து எல்லாரும் அதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணினாங்க.

யாருக்கும் நன்றி சொல்ல முடியாது. ஏன்னா எல்லாரும் சேர்ந்துதான் உங்களுக்கு இந்தப் படத்தைக் கொடுக்கிறோம்.” எனப் பேசினார்.

“ராதே ஷியாம் பார்த்து பூஜாவை செலக்ட் பண்ணினேன்”

மேலும் பூஜா ஹெக்டேவை தேர்ந்தெடுத்தது குறித்து, “எனக்கு ஹெவியாக பர்ஃபாமன்ஸ் பண்ற ஹீரோயின் தேவைப்பட்டாங்க. பூஜா பெருசா அந்த மாதிரி படம் பண்ணினதில்ல, ஆனால் ராதே ஷ்யாம் படத்தின் ஒரு காட்சியைப் பார்த்து இந்தப் படத்தின் கேரக்டருக்கு சரியாக இருப்பார்னு நினைச்சேன்.

Pooja Hegde  | பூஜா ஹெக்டே
Pooja Hegde | பூஜா ஹெக்டே

இந்தப் படத்துல நடிக்கும்போதே நடிகர் ஜோஜு ஜார்ஜ், `பனி’னு ஒரு மலையாள சினிமா எடுத்தாரு. அதுவும் நல்ல திரைப்படம் அதையும் பாருங்க.” என்றார்.

ரெட்ரோவுக்காக ட்ரெய்லர் கட் செய்த அல்போன்ஸ் புத்திரன் குறித்து, “என்னுடைய ஒரு குறும்படத்தை நானேதான் எடிட் பண்ணினேன். நாளைய இயக்குநர் டைம்ல நீங்க எடிட்டர் வச்சுக்கணும்னு சொன்னாங்க. அப்போ அவர் கோடம்பாக்கத்துல ஒரு மேன்ஷன்ல இருப்பாரு. என்னுடைய நாளைய இயக்கநர் நாட்கள் அந்த மேன்ஷன்ல அதிகமாக இருந்திருக்கு. அதுக்கு பிறகு நேரம், ப்ரேமம்னு எங்கயோ போனாரு.”எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.