Rs 50-crore dog: "அந்த நாய் ரூ.50 கோடியெல்லாம் இல்லைங்க" – அமலாக்கத் துறை சோதனையில் வெளிவந்த உண்மை

பெங்களூரைச் சேர்ந்த எஸ்.சதிஷ் என்ற நபர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாய் என்றும் உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட நாய் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதை வைத்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் நல்ல பணம் சம்பாதித்திருக்கிறார். மேலும், தனது 7 ஏக்கர் பண்ணையில் பல அரிய வகை நாய்களை வைத்திருப்பத்தாகப் பெருமையாகப் பேசி பிரபலமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

wolfdog

ஒரு நாயே ரூ.50 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்றால் அவரது பண்ணையில் இன்னும் எவ்வளவு மதிப்பில் நாய்கள் இருக்கும் என்று ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு அவருக்கு மாஸை ஏற்றிவிட, அவரிடம் எப்படி இவ்வளவு பணம் புழங்குகிறது என்கிற சந்தேகத்தில் அமலாக்கத் துறை அவரது பண்ணையில் சோதனை நடத்தியிருக்கிறது.

அந்தச் சோதனையில் கோடிகளில் பணம் வைத்திருக்கும் சதீஷ் மாட்டுவார் என்று பார்த்தால், அவர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியது பொய் என்று சொல்லி மாட்டிக்கொண்டுள்ளார்.

wolfdog

அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயெல்லாம் இல்லையாம், அவர் பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் நாய் பக்கத்து வீட்டுக்காரரின் இந்திய வகையைச் சேர்ந்த நாய் என்பதும் அதன் விலை ரூ.1 லட்சம் என்பதும் அம்பலமானது. கருப்புப் பணமா? ஹவாலாவா? எனப் பல மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரித்ததில், அவரே உண்மையைச் சொல்லி சரணடைந்திருக்கிறார். ஒரு பொய்யோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, இப்படி பல பொய்களைக் கூறி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பணம் சம்பாதித்திருக்கிறார். அதோடு நாயின் விலையை கோடிகளில் சொல்லி சமூக வலைதளங்களில் பெருமை அடித்து மாட்டிக்கொண்டிருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.