கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் பேசியிருக்கும் சிம்பு, “கமல் சார் என்னுடைய ஆன் ஸ்கிரீன் குரு. இந்தப் படத்தில Surreal- ஆக நினைக்கிற அத்தனை விஷயங்களும் நடந்திருக்கு. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல மெதுவாக அனைத்து விஷயங்களையும் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கேன்.
இன்னைக்கு நடிகராக அவர்கூட நடிச்சிருக்கேன். அவரும் என்னை நல்லபடியாகப் பார்த்துகிட்டாரு. படத்தைப் பற்றி பெரிதளவில் சொல்ல முடியாது.
கண்டிப்பாக இது வித்தியாசமான படமாக இருக்கும். ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படத்துல நடிச்சதுக்கு எனக்குப் பெருமை.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு அப்புறம் த்ரிஷாகூட இந்தப் படத்துல இணைந்திருக்கேன். அசோக் செல்வனின் திறமையை எப்போதும் நான் பாராட்டுவேன்.” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சிம்பு :
எனக்கு முதல்ல ஆச்சரியமாக இருந்துச்சு. தனியாக கமல் சார்கூட நடிக்கிறது கஷ்டம். இது மணி சாரும் இருக்காரு. ஆனால், இவங்க ரெண்டு பேரையும் கவனிச்சேன். இந்த வாய்ப்புக்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக பார்க்கிறேன்.கமல் சார் மிகப்பெரிய டான்சார். இந்தப் பாடலுக்கான டேக் வந்ததும் மிரட்டிட்டாரு. அந்தப் பகுதியில் டான்ஸ் பண்றது கஷ்டம். ஆனா, சார் மிரட்டிட்டாரு.
உடனே கமல்,
இந்தப் பாடல் எடுக்கும்போது மணி கிட்ட ஷாட் சூப்பராக இருக்கு எடுக்கனுங்க சொன்னேன். அவர் நீங்க இந்தப் பாடல்ல இருக்கணும்னு சொன்னாரு. சிம்புவோட ராட்சச எனர்ஜிக்கு ஈடு கொடுக்கணும்னுதான் இந்தப் பாடல்ல எனர்ஜியைக் கொடுத்தேன். எங்க அம்மா என்னை ‘ வந்துட்டானா அந்த தக்’னு கேட்பாங்க. இப்போ எல்லோருக்கும் படமாக கிடைச்சுருக்கு.

சிம்பு :
‘சகலகலா வல்லவன்’ படத்துல ஒரு பாடல்ல லைட் ஒரு புறமிருந்து மறு புறம் போகும். அந்த இடத்துல அவர் நடனமாடணும் அதே சமயம் லைட் தலையில அடிச்சிடாமல் கடந்து போகணும். அந்த விஷயத்தை நிகழ்த்திக் காட்டினார் கமல் சார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…