Virat Kohli, RCB : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என இரு அணிகளுமே தீவிர முனைப்புடன் இருக்கின்றன. இந்த சூழலில் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. ஒரு டீசர்ட் வாங்குவதால் ஆர்சிபி ரசிக்ரகள் தங்களின் பேவரைட் பிளேயரான விராட் கோலியை சந்திக்கலாம். ஆம், இந்த அறிவிப்பு உண்மையானது. விராட் கோலி மட்டுமல்ல இன்னும் சில ஆர்சிபி பிளேயர்களையும் நீங்கள் சந்திக்க முடியும்.
இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஆர்சிபி அணியுடன் ஒப்பந்தம் வைத்துள்ள புமா (PUMA) நிறுவனம் ஆகும். பெங்களூருவில் இருக்கும் 100 அடி சாலை, இந்திராநகர் அல்லது பிரிகேட் சாலையில் உள்ள புமா ஸ்டோர்களில் ஆர்சிபி – புமா டீ சர்ட் வாங்கும் ரசிகர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும். இந்த ஸ்டோர்களில் டீ சர்ட் வாங்கும் ரசிகர்கள் ரஜத் படிதார், விராட் கோலி, க்ருனால் பாண்டியா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார் மற்றும் சால்ட் ஆகியோருடன் VR photo booths மூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் நல்ல ரன்ரேட்டிலும் இருப்பதால் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்யும் முனைப்புடன் இருக்கிறது. இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றாலே ஏறத்தாழ பிளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்கிவிடலாம். அதனால் ஆர்சிபி அணி இப்போது அதில் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்டான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அதேநேரத்தில் வெளியூரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றியை பெற ஆர்சிபி திட்டமிட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியும் 6 போட்டிகளில் 4ல் வெற்றியை பெற்றுள்ளது. கேகேஆர் அணியை வெறும் 95 ரன்களில் ஆல்அவுட் செய்து கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றியை பெற்றது. இதனால் இன்றைய போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.