டெய்ர் அல்-பலா (காசா பகுதி),
இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.இந்த போாில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
2 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வரும் போரில், காசாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இறந்தவர்களில் குறைந்தது 15 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்றும், சிலர் நியமிக்கப்பட்ட மனிதாபிமான மண்டலத்தில் தஞ்சம் புகுந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.