டெல்லி: உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கெடு விதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மசோதாக்களுக்கு 3 மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வழக்கில் உச்சநீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கெடு […]
