பட்லர், ரூதர்ஃபோர்ட் அதிரடி ஆட்டம்.. முதல் இடத்திற்கு முன்னேறிய குஜராத் அணி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் மற்றும் கருண் நாயர் களம் இறங்கினர். ஆனால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியாத இந்த கூட்டணி 23 ரன்களில் பிரிந்தது. அர்சத் கான் வீசிய பந்தில் அபிஷேக் போரல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் வந்த கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடிய நிலையில், 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 

டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. இருப்பினும் ரன்களை சேர்ப்பதில் தவறவில்லை. கருண் நாயர் 31, ஸ்டப்ஸ் 31, அக்சர் படேல் 39, அஷுதோஷ் சர்மா 37 என ஆட்டமிழந்தனர். இறுதியில் டெல்லி அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்களை கைப்பற்றினார். 

இதனைத் தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்ன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கில் மற்றும் சாய் சுதர்சன் களம் இறங்கினர். அணிக்கு 14 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். இதையடுத்து சாய் சுதர்சன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் மற்றும் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் கைகோர்த்தனர். 

இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறியது. இருவரும் அதிரடியாக விளையாடி 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இறுதி கட்டத்தில் ரூதர்ஃபோர்ட் 43 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் திவாடியா ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். ஜோஸ் பட்லர் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

மேலும் படிங்க: SRH-ன் மோசமான விளையாட்டிற்கு காரணம் இதுதான்.. போட்டுடைத்த மைக்கேல் கிளார்க்!

மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த பக்கா பிளான் போட்ட தோனி..!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.